News July 8, 2024
இசைப்பள்ளியில் சேர விண்ணப்பிக்கலாம்

தி.மலை மாவட்ட அரசு இசைப்பள்ளி பகுதிநேர நாட்டுப்புற கலை பயிற்சி வகுப்புகள் 12-ஆம் தேதி துவங்க உள்ளது. பாரம்பரிய கலைகள் தெருக்கூத்து, பெரியமேளம், பம்பை, கிராமிய பாடல் பிரிவுகளுக்கு 1 ஆண்டு சான்றிதழ் பயிற்சி அளிக்கப்படுகிறது. விருப்பமுள்ளோர் தி.மலையில் உள்ள இசைப்பள்ளியில் விண்ணப்பத்தை பெற்றுக் கொள்ளலாமென ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.
Similar News
News July 7, 2025
தி.மலையில் மின்வேலியால் தொழிலாளி பலி!

வந்தவாசியை அடுத்த அதியனூரை சேர்ந்த விவசாயி சாமிக்கண்ணு (48). இவரது விவசாய நிலத்தில் உள்ள நெற்பயிரை காட்டுப்பன்றிகள் நாசம் செய்வதால் சட்டவிரோதமாக வயலில் மின்வேலி அமைத்திருந்தார். இந்த நிலையில், அதே பகுதியை சேர்ந்த குப்பன் (43) என்பவர் நேற்று காலை அந்த நிலத்தின் வழியாக சென்றபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். இது குறித்து கீழ்கொடுங்காலூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
News July 6, 2025
தி.மலையில் இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று இரவு (ஜூலை 6) இரவு 10 மணி முதல் நாளை காலை 06 மணி வரை இரவு ரோந்துக்கு தாலுக்கா வாரியாக நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் விவரங்கள் மற்றும் தொலைபேசி எண்கள் மேலே உள்ள அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது. அவசர காலத்தில் உங்கள் தாலுக்கா அதிகாரி அழைக்கலாம் மற்றும் 100 அழைக்கலாம் என மாவட்ட காவல் அலுவலகம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
News July 6, 2025
இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (06.07.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க