News March 24, 2026

இக்கட்டான சூழலில் கைகொடுத்த ‘எத்தனால்’ திட்டம்!

image

பெட்ரோலில் எத்தனால் கலப்பு இக்கட்டான சூழலில் கைகொடுத்துள்ளதாக PM மோடி கூறியுள்ளார். இந்தியாவில் தற்போது உள்ள 380 எத்தனால் வடிவமைப்பு ஆலைகளில், 2,000 கோடி லிட்டர் எத்தனால் தயாரிக்கப்படுகிறது. இவற்றின் மூலம் கடந்தாண்டில் மட்டும் 4.50 கோடி பேரல் கச்சா எண்ணெய் இறக்குமதி குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டின் அந்நிய செலாவணியையும் மிச்சப்படுத்தியுள்ளதாக PM மோடி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

Similar News

News April 5, 2026

விஜய் அரசியலை தாக்கிய சீமான்

image

திருச்சி பிரசாரத்தில் விஜய் பேசியதை சீமான் கடுமையாக சாடியுள்ளார். எனக்காகவும், உங்களுக்காகவும் நியாயம் கேட்டு வந்துள்ளேன் என விஜய் பிரசாரத்தின்போது பேசியிருந்தார். இந்நிலையில், சொந்த வலி என்பது மக்களுடைய வலி கிடையாது என்றும் மக்கள் வலிக்கு தீர்வு காண்பவனே தலைவன் என்றும் சீமான் விமர்சித்தார். மேலும், தன்மீது 262 வழக்குகள் இருந்ததாகவும், அதற்காக ஏறாத நீதிமன்றமோ, போகாத சிறையோ இல்லை என்றார்.

News April 5, 2026

இந்தியா நோக்கி வரும் அடுத்த LPG கப்பல்

image

மேற்காசிய போர் பதற்றத்திற்கு இடையே இந்தியக் கொடியுடன் கூடிய ‘கிரீன் சான்வி’ என்ற எரிவாயு கப்பல் ஹார்முஸ் நீரிணையை பாதுகாப்பாகக் கடந்துள்ளது. சுமார் 46,650 மெட்ரிக் டன் LPG எரிவாயு உடன் வந்து கொண்டிருக்கும் இந்த கப்பல், இன்னும் சில நாள்களில் இந்தியாவை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை 8 கப்பல்கள் ஹார்முஸ் நீரிணையை கடந்து வந்துள்ளன. இன்னும் 15 கப்பல்கள் வர உள்ளன.

News April 5, 2026

“ராகுல் பிரதம​ரானதும் புதுச்​சேரிக்கு மாநில அந்​தஸ்து”

image

புதுச்​சேரி​யில் நடைபெற்ற பொதுக்​கூட்​டத்​தில் பேசிய கார்கே, ராகுல் காந்தி பிரதமரானவுடன் புதுச்​சேரிக்கு மாநில அந்​தஸ்து வழங்​கப்​படும் என்று அறிவித்தார். அதைத்தொடர்ந்து தேர்தல் வாக்குறுதியாக 2026-ல் காங்கிரஸ் வந்தால், வீடுதேடி மாதந்​தோறும் ₹2,500 மதிப்புள்ள மளிகை பொருள்கள், தாலிக்கு தங்​கம், கல்லூரி மாணவர்களுக்கு மாதம் ₹2,000 வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

error: Content is protected !!