News January 22, 2026
ஆஸ்கர் விருதுகள்: இறுதிப் பட்டியல் வெளியானது

ஆஸ்கர் விருதுகள் பைனல்ஸுக்கு தேர்வான படங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. சர்வதேச பிரிவில் போட்டியிட்ட இந்தியாவின் ‘Home Bound’ தேர்வாகாதது ஏமாற்றமளித்துள்ளது. சீக்ரெட் ஏஜென்ட்(பிரேசில்), இட் வாஸ் ஜஸ்ட் ஆன் ஆக்சிடன்ட்(பிரான்ஸ்), சென்டிமென்டல் வேல்யூ(நார்வே), சிராட்(ஸ்பெயின்), தி வாய்ஸ் ஆப் ஹிந்த் ரஜாப்(டுனீசியா) ஆகிய படங்கள் ரேஸில் உள்ளன. மேலே போட்டோக்களை ஸ்வைப் செய்து பட்டியலை பாருங்கள்.
Similar News
News February 1, 2026
கனிம வளங்களை சுருட்டும் பட்ஜெட்: கனிமொழி

மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார். என்ன செய்தாலும் மக்கள் தங்களுக்கு வாக்களிக்கப் போவதில்லைஎன்பதால் தமிழகம், கேரளா மற்றும் மேற்கு வங்கத்தை பாஜக புறக்கணித்துவிட்டதாகவும் அவர் சாடியுள்ளார். மேலும், தமிழ்நாட்டுக்கு எந்த நிதியும் கொடுக்காமல், நமது கனிமவளங்களை சுருட்டக்கூடிய பட்ஜெட்டாக இது உள்ளதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
News February 1, 2026
திமுக தான் ஒரே சாய்ஸ்? குழப்பத்தில் OPS தரப்பு

ADMK கதவை EPS ஒரேயடியாக அடைத்துவிட்டதால், திமுகவில் இணையலாம் என OPS-யிடம் அவரது ஆதரவாளர்கள் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்படி சென்றால், OPS-க்கு அமைச்சர் பதவி கிடைப்பதோடு ஆதரவாளர்கள் சிலரும் MLA ஆகலாம் என யோசனை சொன்னார்களாம். அதேநேரம், TVK உடன் கூட்டணி அமைத்தால், அதிமுக தோற்பதற்கு காரணமாக இருப்போமே தவிர நமக்கு எந்த பலனும் இல்லையென்றும் நிர்வாகிகள் கூறினார்களாம். என்ன முடிவெடுப்பார் OPS?
News February 1, 2026
H.ராஜாவை நலம் விசாரித்த CM ஸ்டாலின்

பாஜக மூத்த தலைவர் <<19008405>>H.ராஜா<<>>, பக்கவாதத்தால் சென்னை அப்போலோ ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று வருகிறார். ICU-வில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு, தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், H.ராஜாவின் உடல்நிலை குறித்து அறிய, உதயநிதியுடன் CM ஸ்டாலின் ஹாஸ்பிடலுக்கு சென்றார். மேலும், H.ராஜா குடும்பத்தினரை சந்தித்து சிகிச்சை குறித்தும் கேட்டறிந்தார்.


