News August 10, 2024
ஆவின் நெய் விலையை குறைத்தது ஆவின் நிர்வாகம்

ஆவின் நிர்வாகத்தில் தயாரிக்கப்படும் நெய், வெண்ணெய், தயிர், மோர் போன்ற பல்வேறு பொருட்களின் விலைகளை விழா காலங்களில் குறைப்பது வழக்கம். அந்த வகையில், தற்போது ஆடி மாதம் நடைமுறையில் இருப்பதால் 100 ML ஆவின் நெய் 85 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், 75 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என்றும் இந்த அறிவிப்பு இன்று முதல் அமல்படுத்தப்படும் எனவும் ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Similar News
News September 19, 2025
ALERT: சென்னையில் இன்று மழை வெளுக்கும்

தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலைகொண்டுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 21ம் தேதி வரை மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் சென்னையில் இன்று வானம் ஓரளவுக்கு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் எனவும் தெரிவித்துள்ளது. எனவே வெளியே செல்வோர் முன்னெச்சரிக்கையா இருங்க.
News September 19, 2025
சென்னை மக்களே குடிநீர் வரவில்லையா?

சென்னை மக்களே உங்கள் தெருக்களில் குடிநீர் வரவில்லை அல்லது கழிவுநீர் தேங்கி உள்ளதா? இனி கவலை வேண்டாம். குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்றம் சிக்கல்கள் மற்றும் குறைபாடுகளை பகிர 044-4567 4567 என்ற தொலைபேசி எண்ணை chennai metro water அறிமுகம் செய்துள்ளது. இதில் உங்கள் குறைகளை தெரிவிக்கலாம். அல்லது toll-free 1916 எண் மூலம் உடனே தொடர்பு கொள்ளலாம். *இந்த பயனுள்ள தகவலை மறக்காம ஷேர் பண்ணுங்க*
News September 19, 2025
சென்னையில் நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி

சென்னையில் ரேபிஸ் தடுப்பூசி திட்டத்தின் கீழ், இதுவரை 50,823 நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது தெருநாய்கள், வளர்ப்பு நாய்கள் என அனைத்து நாய்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. வருங்காலங்களில் தடுப்பூசி முகாம்கள் தொடர்ந்து நடத்தப்படும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. ரேபிஸ் தடுப்பூசி குறித்து சென்னையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.