News August 23, 2024
ஆவினில் பால் தட்டுப்பாடு இடமில்லை: மனோ தங்கராஜ்

சென்னை நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒன்றில் செய்தியாளர்களை சந்தித்த பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், “தமிழ்நாடு முழுவதும் சிறந்த முறையில் பால்வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. போதுமான பால் கையிருப்பில் உள்ளது. இந்த ஆண்டு ஆவினில் பால் தட்டுப்பாடு என்ற பேச்சுக்கே இடமில்லை. கடந்த ஆண்டை விட 10 லட்சம் லிட்டர் பால் கூடுதலாக இந்த ஆண்டு கொள்முதல் செய்துள்ளோம்” எனத் தெரிவித்தார்.
Similar News
News September 18, 2025
சென்னை இரவு ரோந்துப் பணி போலீசாரின் விவரம்

சென்னை மாவட்டத்தில் இன்று (செப்டம்பர் 17) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News September 17, 2025
வார இறுதி நாள் முன்னிட்டு சிறப்பு பேருந்து இயக்கம்

21ம் தேதி மகாளய அமாவாசையை முன்னிட்டு 20ம் தேதி சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. சென்னை மற்றும் பிற இடங்களில் இருந்தும் ராமேஸ்வரத்துக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கக்கப்படுகிறது கோயம்பேட்டில் இருந்து 19, 20ம் தேதிகளில் தலா 55 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. வார இறுதி நாள்களை முன்னிட்டு 1,055 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்
News September 17, 2025
சென்னையில் 21ம்தேதி போக்குவரத்து மாற்றம்

Cyclothon சென்னை 2025’ நிகழ்ச்சியை ஒட்டி சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் வரும் 21ம் தேதி அதிகாலை 4.30 மணி முதல் காலை 8.30 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னை நகரில் இருந்து மாமல்லபுரம் நோக்கி செல்லும் வாகனம் கே.கே.சாலை வழியாக சோழிங்கநல்லூர் சந்திப்பு, ஒ.எம்.ஆர் சாலை படூர் வழியாக மாமல்லபுரம் தங்கள் இலக்கை அடையளாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது