News October 12, 2025
ஆவடி: ரோந்து காவலர்களின் விவரங்கள்

ஆவடி காவல் ஆணையரகத்தின் கீழ் நடைபெற்ற இரவு ரோந்து பணியில் காவல் அதிகாரிகள் மண்டல வாரியாக இரவுப் பாதைகளில் கண்காணிப்பு மேற்கொண்டனர். பொதுமக்களின் பாதுகாப்பு, சாலை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகள் முழுமையாக கையாளப்பட்டு, அவசர தொடர்பு வசதிகளும் மக்களுக்கு எளிதில் கிடைக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
Similar News
News October 30, 2025
புத்த, சமண, சீக்கிய மதத்தினர் யாத்திரை செல்ல மானியம்

திருவள்ளூர்: தமிழ்நாட்டைச் சார்ந்த 50 புத்த மதத்தினர் 50 சமண மதத்தினர் 20 சீக்கிய மதத்தினர் யாத்திரை மானியமாக சுமார் ஒரு நபருக்கு ரூ10,000விதம் 12 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் பயன்பெற நவ.30ம் தேதிக்குள் www.bcmbcmw.tn.gov.in என்ற இணையதளத்தில் மனுக்களை பதிவிறக்கம் செய்து மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நல அலுவலகத்தில் விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
News October 30, 2025
திருவள்ளூர்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று (அக்.29) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News October 29, 2025
திருவள்ளூர்: SIR குறித்து ஆலோசனை கூட்டம்

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், இன்று (அக்.29) வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் சீராய்வு விளக்க கூட்டம் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தலைமையில் நடைபெற்றது. இதில் அனைத்து கட்சி சார்பான பிரதிநிதிகளும் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.


