News May 23, 2024
ஆவடி மாணவர்கள் சாதனை.!

ஆவடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆவடி கோவர்த்தனகிரி, லட்சுமி நகரை சார்ந்த மாணவன் எஸ்.எல்.நிதிஷ்குமார், மாணவி எஸ்.சஹானா ஆகியோர் மலேசியாவில் உள்ள LINCOLN பல்கலைகழகத்தில் நடைபெற்ற சர்வதேச அளவிலான யோகாசன போட்டியில், இந்தியா சார்பில் பங்கேற்று தங்க பதக்கம் பெற்றனர். இதையடுத்து ஆவடி எம்எல்ஏ நாசர் அவர்களை இன்று சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
Similar News
News August 28, 2025
எண்டோஸ்கோப்பிக் அறுவை சிகிச்சையில் சாதனை

சில நாட்களுக்கு முன் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 60 வயது முதியவர் மூக்கின் வழியாக மூளை நீர் வடிதலிற்கான சிகிச்சை மேற்கொள்ள திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு வந்தார்.முதியவருக்கு எண்டோஸ்கோப்பிக் என்னும் அரிதான அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். சிகிச்சைக்கு பின் முதியவர் நலமுடன் வீடு திரும்பினார். இது மாதிரியான அறுவை சிகிச்சை முதன்முறையாக திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் நடந்துள்ளது.
News August 28, 2025
திருவள்ளூர் இரவு ரோந்து போலீசார் விவரம்

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் நேற்று இரவு 11 மணி முதல், இன்று காலை 7 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள பகுதிகளில், ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரியின் எண்கள், மேலே கொடுக்கப்பட்டுள்ளன. இரவில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க
News August 27, 2025
திருவள்ளூர்: வி.சி.க பிரமுகர் மீது பாய்ந்த ‘குண்டாஸ்’

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியத்தில் உள்ள தனியார் துப்பாக்கித் தொழிற்சாலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பிறந்தநாளை கொண்டாட பணம் கேட்டு மிரட்டியதாக எழுந்த புகாரில், அக்கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் எஸ்.கே. குமார் மணவாளநகர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் அவர் மீது ஆட்சியரின் பரிந்துரைப்படி குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது.