News October 18, 2025
ஆவடி மத்திய அரசு நிறுவனத்தில் வேலை 1/2

பாதுகாப்பு துறையின் கீழ் சென்னை ஆவடியில் உள்ள கனரக வாகன தொழிற்சாலையில் காலியாக உள்ள ஜூனியர் டெக்னீஷியன் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 98 காலிப்பணியிடங்கள் உள்ளன. வயது 18-35 வரை இருக்கலாம். இதற்கு 10th பாஸ் (அ) 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மாதம் ரூ. 21,000 சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள்<
Similar News
News October 28, 2025
புயல் முன்னெச்சரிக்கை–மாவட்ட ஆட்சியர் ஆய்வு

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரதாப் வடகிழக்கு பருவமழை மற்றும் மோன்தா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று (அக்.28) பாக்கம் பெரிய ஏரி பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். ஏரியில் நீர்வரத்து தடையில்லாமல் இருக்க கால்வாய்களை அகலப்படுத்தும் பணிகளை விரைந்து நிறைவேற்றுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த நிகழ்வின்போது துறை சார்ந்த அதிகாரிகள் உடனிருந்தனர்.
News October 28, 2025
திருவள்ளூர்: மோந்தா புயல்-உதவி எண் அறிவிப்பு

வங்க கடலில் மையம் கொண்டுள்ள மோந்தா புயலால், திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. இதனால் திருவள்ளூர் மாவட்டத்தில் மழையினால் ஏற்படும் பாதிப்புகளை தெரிவிக்க எம்பி சசிகாந்த் செந்தில் உதவி எண்களை அறிவித்துள்ளார். (உதவி எண் – 94455 00346 / +91 44-27660991) இதில் தெரிவிக்கப்படும் புகார்களுக்கு உடனடியாக அதிகாரிகளை தொடர்பு கொண்டு தீர்வு காணப்படும் என அறிவித்துள்ளார்.
News October 28, 2025
திருவள்ளூர் மழை நிலவரம்

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று (அக்.27) காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 72 மி.மீ மழை பதிவாகியுள்ளது. மேலும் ஆவடி 67 மி.மீ மழையும், திருத்தணி 18 மி.மீ மழையும், ஊத்துகோட்டை 6 மி.மீ மழையும், திருவாலங்காடு 13மி.மீ மழையும், பூவிருந்தவல்லி 30மி.மீ மழையும், ஜொமின் கொரட்டூர் 27 மி.மீ மழை பதிவாகியுள்ளது. மேலும் இன்றும் மழை பெய்யுமென அறிவிக்கப்பட்டுள்ளது.


