News May 19, 2024
ஆவடி: போலி ஆவணம் தயாரித்து ரூ.1 கோடி நிலம் மோசடி

ஆவடி அருகே கொரட்டூர் பகுதியில் இப்ராஹிம் (76) என்பவருக்கு ரூ.1 கோடி மதிப்பிலான நிலம் உள்ளது. இதனை போலி ஆவணம் தயாரித்து அம்பத்தூர், பானு நகரைச் சேர்ந்த நில புரோக்கர் விஜயகுமார் (47) என்பவர் உள்ளிட்டோர் வேறு நபருக்கு விற்றுள்ளனர். புகாரின் பேரில் ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விஜயகுமாரை நேற்று கைது செய்தனர். மேலும் இந்த வழக்கு போலீஸார் சிலரை தேடி வருகின்றனர்.
Similar News
News March 4, 2026
திருவள்ளூர் கலெக்டர் அறிவித்தார்!

ஊத்துக்கோட்டை சாலையில் கட்டப்பட்டுள்ள புதிய பஸ் ஸ்டாண்ட், திருத்தணி – அரக்கோணம் சாலையில் கட்டப்பட்டுள்ள பஸ் ஸ்டாண்ட் இன்று(மார்ச் 4) பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்படவுள்ளது. வரும் மார்ச் 30ஆம் தேதி முதல் அனைத்து பேருந்துகளும் புது பஸ் ஸ்டாண்டில் இருந்து மட்டுமே இயக்கப்படுமென மாவட்ட கலெக்டர் பிரதாப் தெரிவித்துள்ளார்.
News March 4, 2026
கும்மிடிப்பூண்டி அருகே தூக்கிட்டு தற்கொலை!

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி அடுத்த கம்மார்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரசாந்த்(26). தனியார் தொழிற்சாலையில் பணி புரியும் இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்நிலையில், நேற்று(மார்ச் 3) கிராமத்தில் உள்ள மேல் நிலை நீர்தேக்கத் தொட்டியில் ஏறிய பிரசாந்த், அங்கு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து கும்மிடிப்பூண்டி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News March 4, 2026
திருவள்ளூர் இரவு ரோந்து காவல் விவரம்!

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


