News May 19, 2024
ஆவடி: இளைஞர் புழல் சிறையில் அடைப்பு

ஆவடி அடுத்த அண்ணனூர் பகுதியைச் சேர்ந்தவர் மாதவன் (65). பிப்ரவரி மாதம் இவரை திருவள்ளூர் அருகே பள்ளிப்பட்டு பகுதியைச் சேர்ந்த சரவணன் (32) என்பவர் வீடு புகுந்து வெட்டி கொலை செய்து விட்டு தலைமறைவானார். அம்பத்தூர் நீதிமன்றத்தில் சரணடைந்த சரவணனை, திருமுல்லைவாயல் போலீசார் காவல் எடுத்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் கொலை செய்ததை ஒப்புக் கொண்டதையடுத்து, மீண்டும் நேற்று புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
Similar News
News March 5, 2026
திருவள்ளூர் மாவட்டம் இரவு ரோந்து காவல் விவரங்களுக்கு

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணிக்கான விவரங்கள் தற்பொழுது காவல்துறை சார்பாக வெளியிடப்பட்டுள்ளது. ஈடுபடும் காவலர்களின் தொலைபேசி எண்களும் வெளியிடப்பட்டுள்ளன. மக்களுக்காக இரவுநேர ரோந்து பணியினை ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் காவலர்கள் செயல்படுத்தி வருகின்றனர். இதனை மக்கள் பயன்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டு இருக்கிறார்கள்.
News March 4, 2026
திருவள்ளூர் மாவட்டம் இரவு ரோந்து காவல் விவரங்களுக்கு

திருவள்ளூர் மாவட்டத்தில் இரவு நேர ரோந்து பணிக்கான விவரங்கள் தற்பொழுது காவல்துறை சார்பாக வெளியிடப்பட்டுள்ளது. ஈடுபடும் காவலர்களின் தொலைபேசி எண்களும் வெளியிடப்பட்டுள்ளன. மக்களுக்காக இரவுநேர ரோந்து பணியினை ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் காவலர்கள் செயல்படுத்தி வருகின்றனர். இதனை மக்கள் பயன்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டு இருக்கிறார்கள்.
News March 4, 2026
திருவள்ளூர் மக்களே… நிம்மதி இல்லையா?

திருவள்ளூர், திருமழிசையில் அருள்மிகு ஒத்தாண்டேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. கரிகாலப்பெருவளத்தானின் வெட்டிய கையை மீண்டும் பொருத்தியதால் இவர் கைதந்தபிரான் என அழைக்கப்படுகிறார். இந்த கோவிலில் வந்து வழிப்பாட்டால் மன நிம்மதி கிடைக்குமாம். இக்காலத்தில் மன நிம்மதி தானே முக்கியம். தனக்காவும் குடும்பத்திற்காகவும் ஓடி ஓடி உழைப்பவர்கள் இங்கு ஒரு நாள் சென்று மன அமைதியை பெறலாம். *நண்பர்களுக்கும் பகிருங்கள்*


