News January 20, 2026

ஆவடி அருகே பரிதாப பலி!

image

திருவள்ளூர்: ஆவடி, கவரப்பாளையம், கங்கை அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் கேசவன்(72). இவர், ஆவடியில் கைக்கடிகாரம் விற்பனை செய்யும் கடை நடத்தி வந்தார். இந்நிலையில், நேற்று(ஜன.19) காலை தனது பைக்கில் கடைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, சி.டி.எச் சாலையில், பின்னால் வந்த பைக் மோதியதில் தூக்கி வீசப்பட்டு, அந்த வழியாக சென்ற லாரியின் பின் பகுதியில் மோதி உயிரிழந்தார்.

Similar News

News January 22, 2026

திருவள்ளூர் மக்களே.., 5 ஏக்கர் நிலம் வாங்க வாய்ப்பு!

image

பெண்கள் சொந்த நிலம் வாங்க தமிழக அரசு அறிமுகப்படுத்திய ‘நன்னிலம்’ திட்டத்தின் கீழ் 2.5- 5 ஏக்கர் வரையிலான நிலம் வாங்க 50% மானியத்துடன் கடனுதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள்ளிருக்கும் 18 – 56 வயது வரை உள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க விரும்புவோர் TAHDCO அலுவலகத்தில் நேரடியாக சென்றோ (அ) <>இங்கு <<>>கிளிக் செய்து விண்ணப்பிக்கவும். ஷேர் பண்ணுங்க.

News January 22, 2026

திருவள்ளூர்: CBI வங்கியில் 350 காலியிடங்கள்! APPLY

image

திருவள்ளூர் மக்களே.., CBI வங்கியில் 350 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு ஏதேனும் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.44,480 முதல் ரூ.1,05,280 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் உடனே இங்கு <>க்ளிக் <<>>செய்து பிப்.03-க்குள் விண்ணப்பிக்கலாம். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 22, 2026

திருவள்ளூரில் 8 கிராம் தங்கம் இலவசம்!

image

TN அரசு சாதி மறுப்பு திருமணங்களை ஊக்குவிக்க டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி கலப்பு திருமண திட்டத்தை செயல்படுத்துகிறது. இதன்படி, மணமக்கள் 10th முடித்திருந்தால் ரூ.25,000, 8 கி தங்கம், டிகிரி பெற்றிருந்தால் ரூ.50,000, 8 கி தங்கம் வழங்கப்படுகிறது. இதற்கு, BC,MBC/SC,ST & FC/BC,MBC முறையில் திருமணம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு சமூக நல அலுவலரை அணுகலாம். இந்த தகவலை உடனே ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!