News April 15, 2024

ஆவடி அருகே துப்பாக்கி முனையில் கொள்ளை

image

ஆவடி அடுத்த முத்தாபுதுப்பேட்டையில் பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான அடகு கடையில் இன்று மதியம் 4 பேர் கொண்ட மர்ம கும்பல் துப்பாக்கி முனையில் பிரகாஷை கட்டி போட்டு விட்டு, சுமார் ஒன்றரை கோடி மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் அப்பகுதி சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News February 15, 2026

திருவள்ளூர்: SBI வங்கியில் வேலை வேண்டுமா..? APPLY NOW

image

திருவள்ளூர் மாவட்ட பட்டதாரிகளே.., SBI வங்கியில் காலியாக உள்ள ‘Circle Based Officer( CBO)’ பணிக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தாலே போதுமானது. மாதம் ரூ.48,000 முதல் சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க பிப்.25ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே <<>>கிளிக் பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News February 15, 2026

கும்மிடிப்பூண்டியில் அதிரடி கைது!

image

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி பகுதி ஏலாவூர் சோதனைச் சாவடியில் 30க்கும் மேற்பட்ட ஆட்கள் வாகனங்களை நிறுத்தி வாகனங்களை பரிசோதிக்கும் வேலையில் சுழற்சி முறையில் செய்து வருகின்றனர். இந்நிலையில், வேலையாட்களுக்கும் அதிகாரிகளுக்கும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் அதிகாரிகள் வேலையாட்கள் மீது ஆரம்பாக்கம் போலீஸிடம் புகார் அளித்துள்ளனர். இந்தப் புகாரின் பேரில் மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

News February 15, 2026

திருவள்ளூரில் பயங்கர தீ விபத்து!

image

கடம்பத்தூர் ஒன்றியம் புதுவள்ளூர் கிராமம், பால்வாடி தெருவைச் சேர்ந்தவர் விமலா(38). நேற்று முன் தினம் விமலா, வழக்கம் போல் தன்னுடைய வீட்டை பூட்டி விட்டு, வேலைக்கு சென்றார். அப்போது, அவரது வீட்டில் எதிர்பாராத விதமாக மின் கசிவு ஏற்பட்டது. இதனால், பயங்கர தீ பரவி, துணிமணிகல், சாமான்கள், சான்றிதழ்கள், ரூ.43 ஆயிரம் பணம் போன்றவை தீயில் எரிந்து நாசமானன. இதுகுறித்து மணவாளநகர் போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!