News August 21, 2025
ஆவடியில் சூப்பர் வேலை!

ஆவடியில் உள்ள ராணுவ வாகனங்கள் தயாரிக்கும் நிறுவனத்தின் கீழ் எஞ்சின் தொழிற்சாலையில் தொழிற்பயிற்சி பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கு ITI, டிப்ளமோ & இன்ஜினியரிங் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு மாதம் ரூ.18,000 வரை உதவித்தொகை வழங்கப்படும். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் நேரடியாக நேர்காணலில் கலந்துகொள்ளலாம். நேர்காணல் செபடம்பர் 15ம் தேதி நடைபெற உள்ளது. ஷேர் பண்ணுங்க.
Similar News
News January 28, 2026
திருவள்ளூரில் அதிரடி கைது!

மணவாளநகர்போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் குட்கா விற்பனை நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. காவல் கண்காணிப்பாளர் உத்தரவில் மணவாளநகர் போலீசார் பட்டரைப் பகுதியில் அதிரடி சோதனை செய்தனர். இதில், ராமதாஸ் தெருவைச் சேர்ந்த ஏழுமலையிடம்(54) 128 கிலோ குட்கா, வெங்கடேசன்(47) என்பவரிடம் 128 கிலோ குட்கா என பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
News January 28, 2026
திருவள்ளூரில் நாளை பவர் கட்!

ஊத்துக்கோட்டை துணை மின் நிலையத்தில் நாளை(ஜன.29) பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் ஊத்துக்கோட்டை, தாரட்சி, போந்தவாக்கம், அனந்தேரி, மாம்பாக்கம், மாமண்டூர், வேலகாபுரம், வேலகமகண்டிகை, பென்னலூர்பேட்டை, காசிரெட்டிப்பட்டி ஆகிய பகுதிகளில் காலை 9:00 – மாலை 5:00 மணி வரை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News January 28, 2026
திருவள்ளூரில் வாலிபர் படிதாப பலி!

திருவள்ளூர்: கூடப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த கௌரி சங்கர் (29) என்பவர், நேற்று முன் தினம் நண்பர்களுடன் அருகில் உள்ள ஏரியில் மீன்பிடிக்கச் சென்றபோது சேற்றில் சிக்கி உயிரிழந்தார். நீண்ட நேரம் ஆகியும் அவர் திரும்பாததால், நண்பர் அசோக் குமார் அளித்த தகவலின் பேரில் தீயணைப்புத் துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். நேற்று(ஜன.27) காலை சேற்றில் புதையுண்டு கிடந்த அவரது உடலை மீட்டனர்.


