News October 27, 2024

 ஆளுநர் மாளிகையில் முதல்வர் ஆய்வு

image

புதுச்சேரி ஆளுநர் மாளிகையை இடமாற்றம் செய்ய ஒப்புதல் பெறப்பட்டது. இதையடுத்து தற்காலிகமாக புதுச்சேரி ஆளுநர் மாளிகை மாற்றம் செய்யப்பட உள்ளது. இந்நிலையில் தற்காலிகமாக கட்டபட்டு வரும் ஆளுநர் மாளிகையை முதலமைச்சர் ரங்கசாமி இன்று ஆய்வு மேற்கொண்டார் . அதிகாரிகளிடம் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

Similar News

News January 27, 2026

புதுவை: பொது இடத்தில் ரகளை – 2 பேர் கைது

image

நிரவி பழைய பள்ளிவாசல் முன்பு 2 பேர் நின்றுகொண்டு அவ்வழியாக செல்வோரை ஆபாசமாக திட்டி ரகளையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அவ்வழியாக சென்ற நிரவி போலீசார் அவர்களை எச்சரித்தும், அங்கிருந்து செல்லாததால், காவல்நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். அதில், அவர்கள் நிரவி பள்ளிவாசல் தெரு அப்துல் ரகுமான், மேலராஜா தெரு முகமது அன்வர் ஷாஜி என்பது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

News January 27, 2026

புதுச்சேரி: செல்போன் பயனாளிகளே உஷார்!

image

உங்கள் போனுக்கு வரும் அழைப்புகள் மற்றும் OTP எண்களைத் திருட சைபர் குற்றவாளிகள் ‘கால் பார்வேர்டிங்’ முறையைப் பயன்படுத்தலாம். இதைச் சரிபார்க்க உங்கள் மொபைலில் *#21# என்று டயல் செய்யுங்கள். அங்கு வேறு எண்களுக்கு ‘Forward’ ஆகிறதா என்பதை அறியலாம். அப்படித் தகவல்கள் கசிந்தால், உடனடியாக ##002# என டயல் செய்து அனைத்துப் பார்வேர்டிங் வசதிகளையும் ரத்து செய்யலாம். இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News January 27, 2026

புதுவை மக்களே உஷார்.. ரூ.5.5 கோடி மோசடி!

image

புதுவை, ரெயின்போ நகரை சேர்ந்த தொழிலதிபரை, வாட்ஸாப் மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர், ஆன்லைனில் டிரேடிங் முதலீடு செய்தால், அதிக லாபம் சம்பாதிக்கலாம் என, கூறியுள்ளார். இதனை நம்பி மர்ம நபர் தெரிவித்த ஆன்லைனில் பல்வேறு தவணைகளாக, 5 கோடியே 50 லட்சம் ரூபாயை முதலீடு செய்த அவர், மோசடி கும்பலால் ஏமாற்றப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!