News March 30, 2025

ஆளுநரை வரவேற்ற மாவட்ட ஆட்சியர்

image

தஞ்சாவூர் மாவட்டத்துக்கு இன்று (30.03.2025) வருகை தந்த ஆளுநர் ஆர்.என்.ரவியை, மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் கும்பகோணம் காவேரி திட்ட இல்லத்தில் புத்தகம் வழங்கி வரவேற்றார். இந்நிகழ்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா. இராஜாராம் உடன் இருந்தார்.

Similar News

News February 10, 2026

தஞ்சை: பீஸ் இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

image

தஞ்சை மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளலாம்.
1. தஞ்சை மாவட்ட இலவச சட்ட உதவி மையம்: 04362-230776
2. தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441
3. Toll Free: 1800 4252 441
4. சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
5. உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News February 10, 2026

AI குறித்து விழிப்புணர்வு ஆட்சியர் தலைமையில் உறுதிமொழி ஏற்பு!

image

தஞ்சாவூர் ஆட்சியர் அலுவலக தேசிய தகவலியல் மையத்தில், இணைய பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு AI-யின் பாதுகாப்பான மற்றும் பொறுப்பான பயன்பாட்டிற்கான விழிப்புணர்வு உறுதிமொழி நிகழ்ச்சி இன்று (பிப்.10) நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஆட்சியர் பா. பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஆட்சியர் நேர்முக உதவியாளர் தவச்செல்வம் உள்ளிட்டோர் உறுதிமொழி ஏற்றனர்.

News February 10, 2026

தஞ்சாவூரில் அரசு ஊழியர்களுக்கான மருத்துவ முகாம்

image

தஞ்சாவூர் ஆட்சியர் அலுவலகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் அரசு ஊழியர்களுக்கான மருத்துவ முகாம் இன்று (பிப்.10) நடைபெற்றது. இந்த முகாமை ஆட்சியர் பா. பிரியங்கா பங்கஜம் தொடங்கி வைத்து பார்வையிட்டார். அரசு ஊழியர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

error: Content is protected !!