News December 6, 2025
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் பொன்மொழிகள்!

*மற்றவர்களைவிட திறமையாக விளையாட வேண்டுமானால் முதலில் விளையாட்டின் விதிகளைக் கற்றுக்கொள்ள வேண்டும் *வெற்றிபெற்ற மனிதனாக ஆவதற்கு முயற்சி செய்யாதீர்கள்! மாறாக, மதிப்புமிக்க மனிதனாக மாற முயலுங்கள் *அமைதி என்பது ஆழமான புரிதலினால் ஏற்படுவது, அதை ஒருபோதும் அடக்குமுறையால் ஏற்படுத்திவிட முடியாது *மற்றவர்களுக்காக வாழும் வாழ்க்கையே, ஒரு பயனுள்ள வாழ்க்கையாகிறது
Similar News
News December 6, 2025
பெரம்பலூர்: 50,000 வாக்காளர்கள் நீக்கம்!

பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியில் தற்போது வரை, 50,767 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் மிருணாளினி தெரிவித்துள்ளார், மேலும் வாக்காளர் பட்டியல் மறு சரிபார்ப்பு பணிகள் 16-ந்தேதி வரை நடைபெறும் என்றும், இதில் ஆட்சேபனை உள்ளவர்கள் ஜன.15-ந் தேதி வரை வாக்காளர் பதிவு அல்லது உதவி அலுவலரை அணுகலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
News December 6, 2025
முருகரும் ராமரும் எங்கள் பக்கம் தான்: RS பாரதி

பார்லிமெண்ட்டில் திருப்பரங்குன்றம் விவகாரம் மீதான விவாதத்தில் எல்.முருகன், தமிழக அரசை விமர்சித்திருந்தார். இந்நிலையில், முருகன் என்று பெயர் வைத்துள்ளவர்கள் எல்லாம் முருகன் ஆகிவிட முடியாது என RS பாரதி விமர்சித்துள்ளார். மேலும் அறுபடை வீடுகள் உள்ள தொகுதிகளில் எல்லாம் திமுக தான் வெற்றி பெற்றது என்ற அவர், முருகனும் எங்கள் பக்கம் தான், ராமரும் எங்கள் பக்கம் தான் என கூறினார்.
News December 6, 2025
திடீர் கோடீஸ்வரர் அண்ணாமலை? சாடும் CPM

கர்நாடகா, TN-ல் பல ஏக்கர் நிலங்களை அண்ணாமலை வாங்கி குவித்துள்ளதாக CPM மாநில செயலர் பெ.சண்முகம் குற்றஞ்சாட்டிள்ளார். ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டுள்ள அண்ணாமலை, 246 ஆடம்பர மாளிகைகளை விற்பதற்காக காட்டுவதாகும், அவற்றின் மதிப்பு தலா ₹9 கோடி என்றும் தெரிவித்துள்ளார். இப்படி திடீர் கோடீஸ்வரரான ரகசியத்தை அவர் விளக்கி, தான் ஒரு கிளீன் மேன் என்பதை நிரூபிக்க வேண்டும் என பெ.சண்முகம் கூறியுள்ளார்.


