News August 30, 2024

ஆலை உரிமையாளர்களுக்கு தலா 3 ஆண்டுகள் சிறை

image

விருதுநகர் அருகே காரிசேரி பகுதியில் செயல்பட்ட தனியார் பட்டாசு ஆலையில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடிவிபத்தில் மாரியப்பன், அருள்தாஸ், பிரபாகரன் ஆகியோர் உயிரிழந்தனர். இந்த வழக்கு விருதுநகர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இந்த வழக்கை விசாரித்த மாவட்ட கூடுதல் அமர்வு நீதிபதி ஆலை உரிமையாளர்களான ராமர்(60), முத்துராமன்(58) ஆகியோருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தார்.

Similar News

News October 19, 2025

விருதுநகரில் பட்டபகலில் மிளகாய் பொடி துாவி திருட முயற்சி

image

விருதுநகர் TKC பெரியசாமி தெருவை சேர்ந்தவர் மகாலிங்கம் 56. இவர் காசுக்கடை பஜாரில் தங்க நகைகள் செய்து கொடுக்கும் பட்டறை வைத்துள்ளார். முத்தால் நகரைச் சேர்ந்த பட்டுராஜா தங்க மோதிரம் வேண்டும் என கேட்டார்.நகைகள் வாங்க வேறு கடைக்கு செல்லுமாறு கூறிய மகாலிங்கத்தின் முகத்தில் மிளகாய் பொடியை துாவி கையில் இருந்த தங்க நகையை திருட முயன்று அலைபேசியை மட்டும் திருடிச்சென்றார். போலீசார் பட்டுராஜாவை கைது செய்தனர்.

News October 19, 2025

வத்திராயிருப்பு அருகே மூதாட்டி தீக்குளிப்பு.

image

வத்திராயிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் பஞ்சவர்ணம். இவர் கடந்த அக்.14 ஆம் தேதி மூட்டு வலி தாங்க முடியாமல் வீட்டில் வைத்து உடலில் கற்பூரத்தை தடவி தீ வைத்து காயமடைந்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் மீட்டு வத்திராயிருப்பு அரசு மருத்துவமனை கொண்டு சென்று மேல் சிகிச்சையில் இருந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வத்திராயிருப்பு போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News October 18, 2025

BREAKING விருதுநகரில் 8 போலீசார் மீது நடவடிக்கை

image

விருதுநகரில் பல்வேறு காவல் நிலையங்களில் பணிபுரியும் போலீசார் பட்டாசு கடை நடத்தி வருவதாக புகார் எழுந்ததால் எஸ்பி கண்ணன் உத்தரவின் பேரில் தனிப்படை போலிசார் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்தனர். இதையடுத்து சீனிவாசன், தங்கமுத்து, பழனியப்பன், முருகேசன், சக்திவேல் நெல்லைக்கும், முத்து மாரியப்பன், அயோத்தி ராமசந்திரன், உதயக்குமார் தூத்துக்குடிக்கு மாற்றம் செய்து ஐஜி பிரேமானந்த் சின்கா உத்தரவிட்டுள்ளார்.

error: Content is protected !!