News September 11, 2025
ஆலம்பூண்டி: நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம்

செஞ்சி அடுத்த ஆலம்பூண்டி, ஸ்ரீ ரங்கபூபதி இன்ஜினியரிங் கல்லூரியில் வரும் செப்.13 சனிக்கிழமை காலை நலம் காக்கும் ஸ்டாலின் மாபெரும் உயர் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு பரிசோதனைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்படுகிறது. கலந்து கொள்ள விரும்புவோர் ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட கைபேசி எண்ணை கொண்டு வரவும்.
Similar News
News November 17, 2025
விழுப்புரம்: கை துண்டாகி கிடந்த நபர்!

விழுப்புரம்: பானாம்பட்டை சேர்ந்வர் அசோக். இவர், நேற்று (நவ.16) அங்குள்ள ரயில்வே கேட் அருகில் தண்டவாளத்தில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது, புதுச்சேரியில் இருந்து திருப்பதி நோக்கி சென்ற ரயில், அவர் மீது மோதியது. இதில், அசோக் இடது கை துண்டாகி மயங்கி விழுந்தார். அங்கிருந்தவர்கள், அவரை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது
News November 16, 2025
பட்டனூர்: SIR பணிகளை ஆட்சியர் ஆய்வு

வானூர் வட்டம் பட்டானூர் கிராம நிர்வாக அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து வாக்குச்சாவடி நிலை அலுவலர் செயலியில் உள்ளீடு செய்யும் பணியினை ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் இன்று (நவ.16) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் உதவி வாக்குப்பதிவு அலுவலர் வித்தியாதரன் உட்பட பலர் பங்கேற்றனர்.
News November 16, 2025
பருவ மழை பாதுகாப்பு பணிகளை ஆட்சியர் ஆய்வு

வானூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் எதிர்வரும் வடகிழக்கு பருவ மழையையொட்டி, முன்னேச்சரிக்கை நடவடிக்கையாக மீட்பு பணிகளுக்கான சிறப்பு தளவாடங்கள் தயார் நிலையில் உள்ளது. இந்த நிலையில் விழுப்புரம் ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் இன்று (நவ.16) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் வட்டார வள அலுவலர்கள் தூய்மை பணியாளர்கள் இருந்தனர்.


