News March 10, 2025
ஆலத்தூர் தாலுகாவில் மக்கள் தொடர்பு திட்ட முகம்

ஆலத்தூர் தாலுக்கா, மாவிலங்கை கிராமத்தில், வருகிற 12ஆம்தேதி புதன்கிழமை, மாவட்டக் கலெக்டர் தலைமையில், மக்கள் தொடர்புத்திட்ட முகாம் நடைபெற உள்ளது. இம்மக்கள் தொடர்பு திட்ட முகாமில் பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் இதர தேவைகள் தொடர்பாக மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெறும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. மக்களின் கோரிக்கைகளை மனுவாக அளித்து பயன்பெறலாம்.
Similar News
News September 11, 2025
பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் தகவல் !

பெரம்பலூர் மாவட்ட சிறுபான்மையினருக்கான கல்வி பிரதிநிதிகள் மற்றும் சிறுபான்மை இனத்தை சார்ந்த பொது மக்களின் பிரதிநிதிகள் யாவரும் மாநில சிறுபான்மையினர் ஆணைய குழுவினரை இன்று (செப் 11) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சந்தித்து தங்கள் குறைகளையும் அரசின் பல்வேறு நலத்திட்டங்களை குறித்தும் சிறுபான்மையினரின் நல மேம்பாட்டிற்காக தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் மிருணாளினி தெரிவித்துள்ளார்.
News September 11, 2025
பெரம்பலூர் மக்களே இன்று இங்கே போங்க!

பெரம்பலூர் மக்களே உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் உங்கள் ஆதார், பான் கார்டு, வாக்காளர் அட்டை, மகளிர் உரிமை தொகை, மருத்துவ காப்பீடு, முதியோர் தொகை போன்ற சேவைகளை எளிய முறையில் பெற முடியும். நமது பெரம்பலூர் மாவட்டத்தில் முகாம் நடைபெறும் இடங்கள்
இன்று 11.09.2025
✅வேப்பந்தட்டை ( வாளிகண்டாபுரம்)
✅வேப்பூர்( திருமாந்துறை)
நாளை 12.09.2025
✅ஆலந்தூர்( கீழுமாத்தூர்)
அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News September 11, 2025
பெரம்பலூர் கலெக்டர் ஆய்வு

பெரம்பலூர் மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் பெரம்பலூர் வட்டம், அம்மாபாளையம், களரம்பட்டி ஆகிய ஊராட்சிகளைச் சேர்ந்த பொதுமக்களுக்கு அம்மாபாளையம் ராஜம்மாள் பரவாசு திருமண மண்டபத்திலும், ஆலத்தூர் வட்டம் மேலமாத்தூர், இலந்தங்குழி ஆகிய ஊராட்சிகளைச் சேர்ந்த பொதுமக்களுக்கு மேலமாத்தூர் ஆனந்த் மஹாலிலும் (10.09.2025) நடைபெற்றது.
இதில் அம்மாபாளையத்தில் நடந்த முகாமினை கலெக்டர் ஆய்வு செய்தார்.