News October 16, 2024

ஆலங்குளம் அருகே மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

image

ஆலங்குளம் அருகே கண்டபட்டியை சேர்ந்தவர் லாரன்ஸ்(24) எலக்ட்ரீசியன். தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டத்தில் ஒப்பந்த பணியாளராக பணி செய்து வந்த இவர், நேற்று(அக்.,15) முக்குடை அடுத்த தென்திருபுவனம் அருகில் தாமிரபரணி ஆற்றில் உள்ள உரை கிணற்றில் பராமரிப்பு பணி மேற்கொண்டபோது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் தண்ணீரில் மூழ்கி பலியானார். இது குறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Similar News

News February 17, 2026

தென்காசி: இந்த புகார்களுக்கு Police Station செல்ல வேண்டாம்.!

image

தமிழக காவல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், பாஸ்போர்ட், ஆர்.சி புத்தகம் , ஓட்டுனர் உரிமம், அடையாள அட்டை, school & college certificate இவற்றில் ஏதேனும் ஆவணங்கள் தொலைந்து போனால் காவல் நிலையத்தை அணுக வேண்டிய அவசியமில்லை <>eservices.t police.gov.in<<>> என்ற இணையதளத்தில் புகார் பதிவு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News February 17, 2026

தென்காசி: டிகிரி போதும்.. ரூ.58,000 சம்பளத்தில் வேலை ரெடி

image

இந்திய ரிசர்வ் வங்கியில் (RBI) காலியாகவுள்ள 650 உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. ஏதாவது ஒரு டிகிரி முடித்த 20 – 28 வயதுடையவர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.58,514 வழங்கப்படும். எழுத்து தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். விருப்பமுள்ளவர்கள் <>இங்கு கிளிக்<<>> செய்து மார்ச் 08-க்குள் விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை வேலை தேடும் நண்பர்களுக்கு SHARE

News February 17, 2026

தென்காசி: இன்றைய மின்தடை பகுதிகள் அறிவிப்பு

image

தென்காசி மாவட்டம், நெல்கட்டும்செவல் பகுதியில் இன்று (பிப்.17) மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால் வாசுதேவநல்லூர், சங்கனாப்பேரி, திருமலாபுரம், ராமநாதபுரம், கூடலூர், சங்குபுரம், கீழப்புதூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது. இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!