News December 4, 2024
ஆலங்குளம் அருகே கலைஞர் அறிவாலயம் கட்ட பூமி பூஜை

ஆலங்குளம் அருகே கீழப்பாவூரில் திமுக சார்பில் கலைஞர் அறிவாலயம் கட்டுமான பணி பூமி பூஜை இன்று(டிச.,4) நடந்தது. நிகழ்ச்சியில் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வே.ஜெயபாலன் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். ஒன்றிய செயலாளர் சிவன் பாண்டியன், பேரூர் செயலாளர் ஜெகதீசன் பேரூராட்சி மன்ற தலைவர் ராஜன் மாவட்ட பிரதிநிதி பொன்.செல்வன், சீனி மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ரமேஷ், பொன்.அறிவழகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Similar News
News October 2, 2025
தென்காசி தினசரி சந்தை கடைகள் ஏலம் அறிவிப்பு

தென்காசி நகராட்சியில் புதிதாக கட்டப்பட்டுள்ள தினசரி சந்தையில் உள்ள 77 கடைகளை குத்தகை உரிமம் அனுபவித்துக் கொள்ள ஆணையாளர் அல்லது அவரது அதிகாரம் பெற்றவரால் ஏலம் விடப்பட உள்ளது. அக்டோபர் 24,29 ஆகிய தேதிகளில் நடைபெறும் ஏலத்தில் கலந்து கொள்ள விரும்புவோர் ஏலம் நடைபெறும் நாளில் காலை 11 மணி வரை ஒப்பந்தப்புள்ளிகள் பெற்றுக்கொள்ளப்படும் என்றும், 11.30 மணிக்கு ஏலம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
News October 1, 2025
தென்காசி மாவட்ட இரவு ரோந்து பணி காவலர்கள்

தென்காசி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு இரவு நேரங்களில் காவல் துறை உதவி தேவைப்பட்டால் பொதுமக்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது. இன்று (1.10.2025) தென்காசி மாவட்ட காவல் மற்றும் நெடுஞ்சாலை இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகள் பற்றிய விபரம். அவசர உதவி தேவைப்படுபவர்கள் 100 அல்லது மாவட்ட கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 9884042100ஐ தொடர்பு கொள்ளலாம்.
News October 1, 2025
தென்காசி: ரூ.35,400 சம்பள ரயில்வே வேலை- APPLY!

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 8,850 டிக்கெட் சூப்பர்வைசர், ஸ்டேஷன் மாஸ்டர், சீனியர் கிளர்க் உள்ளிட்ட நான்-டெக்னிக்கல் பாப்புலர் பதவிகளுக்கு (NTPC) விண்ணப்பிக்கலாம்.
1.சம்பளம்: ரூ.35,400 வரை
2.கல்வித் தகுதி: 12ம் வகுப்பு அல்லது ஏதேனும் ஓர் டிகிரி
3.விண்ணப்பம் தொடக்கம்: அக். 21, 2025 முதல்
4.விண்ணப்பிக்கும் முறை: இங்கு <
இந்தத் தகவலைப் பிறருக்கும் பகிரவும்!