News April 18, 2025
ஆலங்குளத்தில் கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம்

ஆலங்குளம் ஆலடி அருணா லிபரல் கலை, அறிவியல் கல்லூரியில் கோடை கால விளையாட்டு சிறப்பு பயிற்சி முகாம், விளையாட்டு போட்டிகள் ஏப்.21 முதல் மே 5 வரை நடைபெறவுள்ளது. 10,11,12ம் வகுப்பு மாணவர்களுக்கு கபடி, கைப்பந்து, கிரிக்கெட் இலவசமாக பயிற்சியளிக்கப்படவுள்ளது. 63691107840, 9585713337, 9486511103 என்ற எண்ணில் முன்பதிவு செய்திடும் படி கல்லூரி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News April 19, 2025
தென்காசியில் வேலை ரெடி

தென்காசி மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஆக்கவுண்டன்ட்,கேஷியர் காலிபணியிடங்கள் உள்ளது. இந்த பணிக்கு டிப்ளமோ, டிகிரி படித்த 20 வயது முதல் 45 வயது வரை உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியமாக ரூ.15 ஆயிரம் வரை வழங்கப்படும். முன் அனுபவம் தேவையில்லை. இங்கு <
News April 19, 2025
முதியவரை அரிவாளால் வெட்டிய நான்கு பேர் கைது

தென்காசி மாவட்டம் அச்சன்புதூர் அருகே கரிசல் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி 62. இவரை வீடு தேடிச் சென்று நான்கு பேர் கொண்ட கும்பல் சரமாரியாக அரிவாளால் வெட்டி தப்பி ஓடினர். குற்றவாளிகள் பாலாஜி, பாலமுருகன், சுபாஷ், சந்தோஷ் ஆகிய நான்கு பேரை அச்சன்புதூர் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
News April 19, 2025
தென்காசி மாவட்ட காவல் உதவி எண்கள்

தென்காசி மாவட்ட எஸ்பி அலுவலகம் இன்று (ஏப்ரல்-18) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் விவரங்களை வெளியிட்டுள்ளது. அதில் தென்காசி மாவட்ட பகுதிகளில் போலீசாரின் அவசர உதவிகள் தேவைப்படும் பொதுமக்கள் தங்கள் பகுதியைச் சேர்ந்த அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு உரிய உதவிகளைப் பெற்றுக் கொள்ளலாம் அல்லது அவசர உதவி எண் 100-ஐ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.