News January 3, 2026

ஆலங்குப்பத்தில் சொத்து வரி செலுத்த சிறப்பு முகாம்

image

புதுச்சேரி உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ் ராஜ் வெளியிட்ட செய்தி குறிப்பில், உழவர்கரை நகராட்சியில் வீட்டுவரி, சொத்துவரி, குடிநீர் கட்டணம் செலுத்துவோரின் நலன்கருதி, நாளை ஞாயிற்றுக்கிழமை ஆலங்குப்பம் அரசு தொடக்கப் பள்ளியில், வரி வசூல் செய்யும் சிறப்பு முகாமை நடத்துகிறது. இந்த முகாம் 9-5 மணி வரை நடக்கிறது. இதில் ஆலங்குப்பம் பகுதியில் வசிக்கும் மக்கள் வரியை செலுத்தலாம் என தெரிவித்தார்.

Similar News

News January 25, 2026

புதுச்சேரி: கவலை நீங்க இந்த கோயில் செல்லுங்கள்

image

புதுச்சேரியில் அமைந்துள்ளது புகழ்பெற்ற காமாட்சி அம்மன் திருக்கோயில், இந்த கோயிலுக்குச் சென்றால் தடைகள் நீங்கும், ஞானம், வெற்றி, செழிப்பு கிடைக்கும், மன அமைதி உண்டாகும், புதிய முயற்சிகளுக்கு நல்ல தொடக்கம் கிடைக்கும், குழந்தை பாக்கியம், குடும்பத்தில் மகிழ்ச்சி போன்ற பல ஆன்மிக, மன நல நன்மைகளை பெறலாம் என்று ஆற்றல் வாய்ந்ததாக நம்பப்படுகிறது. தெரியாதவங்களுக்கு SHARE பண்ணுங்க.

News January 25, 2026

புதுச்சேரி: குடியரசு தின வாழ்த்து தெரிவித்த முதல்வர்

image

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி இன்று வெளியிட்டுள்ள வாழ்த்தும் செய்தியில், புதுச்சேரி மாநில பெருமக்கள் அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். விடுதலைப் பெற்ற இந்தியத் திருநாட்டை, தொலைநோக்குப் பார்வை கொண்ட நமது தலைவர்கள், ஒற்றுமை தியாகம் மற்றும் வலுவான கொள்கைகள் மூலம் இறையாண்மை கொண்ட குடியரசாக உருவாக்கினார்கள் என்றார்.

News January 25, 2026

புதுச்சேரிக்கு புதிய ஐபிஎஸ் அதிகாரிகள் நியமனம்

image

புதிய ஐபிஎஸ் அதிகாரிகள் நியமனம். புதுச்சேரிக்கு புதிதாக இரண்டு ஐபிஎஸ் அதிகாரிகள் நியமிக்கபட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பணியாற்றிய தம்பதிகள் திவ்யா மற்றும் ராகவ் ஆகிய இருவரும் தற்போது புதுச்சேரிக்கு மாற்றப்பட்டுள்ளனர். இதற்கு முன்னர் புதுச்சேரி ஐ.ஜி வேறு மாநிலத்திற்கு பணியிடம் மாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!