News August 7, 2024

ஆலங்குடி ஸ்ரீநாடியம்மன் கோவில் மதுஎடுப்பு திருவிழா

image

ஆலங்குடி ஸ்ரீநாடியம்மன் கோவில் மதுஎடுப்பு திருவிழா இன்று நடைபெற்றது. ஆலங்குடியை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் இருந்து பெண்கள் அலங்காிக்கப்பட்ட மதுகுடங்களை ஊா்வலமாக எடுத்துவந்தனா். கோவிலை அடைந்தபின் எடுத்துவந்த மதுகுடங்களை சுவாமிக்கு வைத்து வழிபட்டனா். சுவாமி நாடியம்மனுக்கு மஹா தீபாதரனை நடைபெற்றது. பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. மதுஎடுப்பு திருவிழாவில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

Similar News

News March 8, 2026

புதுகை: உங்களிடம் கட்டாயம் இருக்க வேண்டிய எண்கள்!

image

1. மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2 .அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4. குழந்தைகளுக்கான அவசர உதவி – 1098
5. முதியோருக்கான அவசர உதவி -1253
6. தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி – 1033
7. பெண்கள் பாதுகாப்பு – 181 / 1091
இப்போது இல்லை என்றாலும் எதோ ஒரு அவசரக் காலத்தில் இந்த எண்கள் நமக்கு உதவும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!

News March 8, 2026

புதுகையில் நாளை தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம்

image

புதுகை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் தொழில் பயிற்சி நிலையங்களில் படித்து, அகில இந்திய தொழிற்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான தொழிற்பழகுநர் பயிற்சிக்கான சேர்க்கை முகாம் நாளை நடைபெறவுள்ளது. மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் காலை 10 மணிக்கு நடைபெறும் இந்த நிகழ்வில், தனியார் நிறுவனங்கள் பங்கேற்பதால் விருப்பமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம் என கலெக்டர் மு.அருணா தெரிவித்துள்ளார்.

News March 8, 2026

புதுக்கோட்டை: மதுபோதையில் ரகளை – ஒருவர் கைது

image

புதுக்கோட்டை மாவட்டம் நமணசமுத்திரம் அடுத்த செட்டியாபட்டி கிளை சாலையில் நேற்று கணேஷ்குமார் (35) என்பவர் மது அருந்திவிட்டு பொதுமக்களுக்கு இடையூறு செய்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து அந்த வழியே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த நமண சமுத்திரம் காவல்துறையினர் அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் விசாரணை மேற்கொண்டு பிணையில் விடுவித்தனர்.

error: Content is protected !!