News November 15, 2025
ஆலங்குடி: பாம்பை பிடித்த தீயணைப்பு துறையினர்

ஆலங்குடி அரசு மருத்துவமனை எதிரே தியாகராஜன் என்பவருடைய கடலை மில் பகுதியில் திடீரென பாம்பு ஒன்று புகுந்துவிட்டது. உடனடியாக அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஆலங்குடி தீயணைப்பு துறையினர் தகவல் அளித்தனர். உடனடியாக தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று நீண்ட நேரம் போராடி பாம்பை லாவகமாக பிடித்தனர். அதன் பிறகு பிடிபட்ட பாம்பை வனப்பகுதிகள் துறையினர் பத்திரமாக விட்டனர்.
Similar News
News November 15, 2025
புதுகை: டிகிரி போதும்..பேங்க் வேலை!

மத்திய பொதுத்துறை நிறுவனமான ‘BANK OF BARODA’ வங்கியில், 2700 அப்ரிண்டிஸ் (apprentice) பயிற்சி இடங்கள் நிரப்பபட உள்ளன. ஏதாவது ஒரு டிகிரி முடித்த, 20 – 28 வயதுக்குட்பட்ட நபர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். பயிற்சியின் போது ரூ.15,000 மாத சம்பளமாக வழங்கப்படும். படித்து முடித்து விட்டு வேலை தேடும் FRESHER-களுக்கு இது அற்புத வாய்ப்பாகும். விருப்பமுள்ளவர்கள் <
News November 15, 2025
புதுகை: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

புதுகை மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? இங்கு <
News November 15, 2025
புதுக்கோட்டை: பூச்சி கடித்து பெண் உயிரிழப்பு

விராலிமலை அடுத்த புதுபட்டியைச் சேர்ந்தவர் பூரணம்மாள் (54). இவர் அவரது வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கும்போது அடையாளம் தெரியாத விஷப்பூச்சி கடித்துள்ளது. இதனை அடுத்து, அவரை வீட்டில் உள்ளவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்துள்ளார். இதுகுறித்து அவரது சகோதரர் அளித்த புகாரின் பேரில் விராலிமலை போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


