News October 3, 2024
ஆலங்குடி அருகே நீரில் மூழ்கி ஒருவர் பலி

தெற்கு குலமங்கலம், கருவன்பட்டி, ரங்கையா மகன் சசிகுமார் 43, நேற்று காலை 6:00 மணிக்கு குடிபோதையில் பெருங்கரையடி மீண்ட அய்யனார் குளத்தில் குளித்து கொண்டிருந்தார். அப்பொழுது நிலை தடுமாறி நீரில் மூழ்கி இறந்து விட்டார். அவரது உடலை தீயணைப்புத் துறையினர் காலை 10:30 மணிக்கு மீட்டனர். அவர் உடல் அறந்தாங்கி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இது குறித்து குலமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News August 23, 2025
புதுக்கோட்டை பற்றிய சுவாரசிய தகவல்கள்!

➡️புதுக்கோட்டை மாவட்டம் தமிழகத்தில் முக்கிய கலாச்சார மாவட்டமாகும்
➡️தனி மாவட்டமாக 1974 ஆண்டு உருவானது
➡️பரப்பளவு: 4663 ச.கி.மீ
➡️மக்கள் தொகை:1618345
➡️அஞ்சல்: 17
➡️மருத்துவமனைகள்: 14
➡️வங்கிகள்: 18
➡️கல்லூரி மற்றும் பல்கலைக்கழகம்: 16
➡️தமிழக அளவில் பழங்கால பொருட்கள் அதிகம் கிடைக்கும் மாவட்டங்களில் ஒன்றாக உள்ளது. அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க
News August 23, 2025
இந்திய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம்

அரசு போக்குவரத்து ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு உடனடியாக அழைத்து பேசி தீர்த்து வைக்க வேண்டும் என வலியுறுத்தி இந்திய தொழிற்சங்க மையத்தின் புதுக்கோட்டை மாவட்டக்குழு சார்பில் ஆதரவு போராட்டம் புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகே இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் புதுக்கோட்டை மண்டல தொழிலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் 100க்கு மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
News August 22, 2025
புதுக்கோட்டை: இரவு ரோந்து காவலர்கள் விபரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று இரவு 10, மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல் துறை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் புதுக்கோட்டை மாவட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.