News April 25, 2024
ஆற்று படுகையில் மூழ்கி மூன்று சிறுவர்கள் பலி

கோவை மாவட்டம், ஆலாந்துறை அடுத்த பெருமாள் கோவில் பதி பகுதியில் உள்ள ஆற்று படுகையில் இன்று (ஏப்.24) குளிக்க சென்ற பிரவீன் (17). கவின் (16), தர்ஷன் (17) ஆகிய 3 பேர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர். இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் 3 பேர் உடலையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ஆலாந்துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News April 20, 2025
அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் வேலை

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் 3,274 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. கோவை மாவட்டத்தில் 100 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு 10ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும். இதற்கு விண்ணப்பிக்க நாளை தான் கடைசி. இங்கு <
News April 20, 2025
9-ம் வகுப்பு மாணவிக்கு குழந்தை பிறந்ததால் அதிர்ச்சி

தொண்டாமுத்தூர் பகுதியை சேர்ந்த கோபாலகிருஷ்ணன்(22) என்பவர் அதே பகுதியை சேர்ந்த 9-ம் வகுப்பு படிக்கும் மாணவியை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் மாணவி கர்ப்பமான நிலையில் பிரசவத்திற்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு குழந்தை பிறந்துள்ளது. விசாரணையில், மாணவிக்கு வயது 16 என தெரியவந்ததை அடுத்து, பேரூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு கோபாலகிருஷ்ணனை தேடி வருகின்றனர்.
News April 20, 2025
கோவையில் யானை தாக்கி முதியவர் பலி!

கோவை, காளம்பாளையம், தாயனூர் தெற்கு தோட்டம் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி(60). இவர் சொந்தமாக ஆடுகளை வைத்து வளர்த்து வருகிறார். நேற்று ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்று விட்டு, பின் மாலை மீண்டும் வீடு திரும்பியுள்ளார். அப்போது, புதர் மறைவில் மறைந்திருந்த குட்டியுடன் கூடிய ஒற்றை காட்டு யானை தாக்கியதில் அவர் பலியானார். இச்சம்பவம் குறித்து காரமடை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.