News August 16, 2024

ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவன் உயிரிழப்பு

image

நன்னிலம் அடுத்த பூந்தோட்டம் அரசு பள்ளியில் படிக்கும் மாணவன் மதிய உணவு இடைவேளை நேரத்தில் சக நண்பர்களோடு பள்ளி அருகே உள்ள மகா ராஜபுரம் ஆற்றில் குளிக்க சென்றுள்ளனர். இதில் ஆற்றில் நீரின் சுழற்சியில் சிக்கினார். பின்னர் மாணவனை மீட்டு நன்னிலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது மாணவன் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறி விட்டனர்.

Similar News

News December 28, 2025

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

image

நன்னிலம் ஒன்றியம் சன்னாநல்லூர் அருகில் உள்ள சொரக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் வாக்காளர் பட்டியல் சேர்க்கை மற்றும் நீக்கல் சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனசந்திரன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் இதில் நன்னிலம் வட்டாட்சியர் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

News December 28, 2025

திருவாரூர்: நில ஆவணங்களை சரி பார்க்க எளிய வழி!

image

திருவாரூர் மக்களே, உங்களது நிலம் தொடர்பான விவரங்களை எளிதில் தெரிந்து கொள்ளும் வகையில், es<>ervices.tn.gov.in<<>> என்ற இணையதளத்தை தமிழக அரசு தொடங்கியுள்ளது. இதன் மூலம் உங்களது நில விவரம், பட்டா, சிட்டா திருத்தம் போன்ற சேவைகளை அரசு அலுவலகங்களுக்கு அலையாமல் வீட்டிலிருந்தே உங்களால் பெற முடியும். இந்த தகவலை மறக்கமால் உங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News December 28, 2025

திருவாரூர் மாவட்டத்தில் உணவு கண்காட்சி

image

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டம் பேரளம் பகுதியில் சோழநாடு உழவர் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பின் இயற்கை விவசாயிகளின் பொங்கல் திருவிழா மற்றும் உணவு கண்காட்சி அறிவிக்கப்பட்டுள்ளது. வருகின்ற ஜனவரி 4 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பேரளம் ஸ்ரீ சங்கரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் இயற்கை வேளாண் பொருட்களின் கண்காட்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!