News March 24, 2024

ஆற்றில் குளித்த சிறுவன் நீரில் மூழ்கி பலி

image

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை கீழ முன்னீர் பள்ளம் புது கிராமம் அருகே தாமிரபரணி ஆற்றில் அருகில் உள்ள சாஸ்தா கோவிலுக்கு சாமி கும்பிட வந்த சிறுவன் ஆற்றில் மூழ்கி விட்டதாக பாளை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் இன்று (மார்ச் 24) வந்துள்ளது. இந்த தகவலின்பேரில் பாளையங்கோட்டை மீட்பு படையினர் விரைந்து சென்று சிறுவனை உடலை சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக தேடி மீட்டனர்.

Similar News

News February 7, 2026

நெல்லை: இனி தவறாக அனுப்பிய Payment-ஐ திரும்ப பெறலாம்!

image

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால், பதற்றம் கொள்ள வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE IT

News February 7, 2026

நெல்லை: BSNL நிறுவனத்தில் ரூ.50,500 சம்பளத்தில் வேலை ரெடி

image

நெல்லை மக்களே, BSNL நிறுவனத்தில் காலியாக உள்ள 120 Senior Executive Trainee பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. 21 – 30 வயதுகுட்பட்ட B.E/B.Tech, CA/CMA படித்தவர்கள் மார்ச் 7க்குள் இங்கு <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளம் ரூ.24,900 – 50,500 வரை வழங்கப்படும். எழுத்து தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE செய்யுங்க.

News February 7, 2026

நெல்லை: பச்சிளங்குழந்தையை புதைத்த தந்தை கைது!

image

மேலப்பாளையத்தை சேர்ந்த நசீம் உசைன் என்பவர் தனது மனைவி அஸ்மாவுக்கு நேற்றிரவு வீட்டில் வைத்து பிரசவம் பார்த்துள்ளார். ஆண் குழந்தை பிறந்த நிலையில் துடிதுடித்து இறந்துள்ளது. அதிர்ச்சியடைந்த நசீம் உசைன் இரவோடு இரவாக குழந்தையின் உடலை அடக்கம் செய்ததாக கூறப்படுகிறது. தகவலறிந்த மேலப்பாளையம் போலீசார் இன்று நசீமை கைது செய்து விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!