News December 8, 2024

ஆற்றில் குளிக்க சென்ற வாலிபர் அடித்து செல்லப்பட்டு மாயம்

image

திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள ஏனாதிமங்கலம் எல்லீஸ் அணைக்கட்டில் விழுப்புரம் மணி நகரைச் சேர்ந்த சின்னசாமி என்ற வாலிபர் இரண்டு நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்தபோது ஆற்றில் அடித்து செல்லப்பட்டு மாயமாகியுள்ளார். இதையடுத்து தீயணைப்புத் துறையினர் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Similar News

News March 3, 2026

தன்னார்வலர்களுக்கு இயற்கை பாதுகாப்பில் முன்னோடி விருது

image

விழுப்புரம் அரசு மாதிரி மகளிர்மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட வனத்துறை சார்பில் மாவட்ட அளவில் இயற்கை மற்றும் பல்லுயிர் பாதுகாப்பில் சிறப்பாக செயல்பட்ட தன்னார்வலர்களுக்கு இயற்கை பாதுகாப்பில் முன்னோடி விருது வழங்கப்பட்டது. இந்த விருதை ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான், இன்று (மார்ச்.03) வழங்கினார். உடன் மாவட்ட வன அலுவலர் பிரண்ஸ் குமார், உட்பட பலர் உள்ளனர்.

News March 3, 2026

விழுப்புரம்: தேர்வு இல்லை – ஆதார் சேவை மையத்தில் வேலை!

image

இந்தியா முழுவதும் உள்ள ஆதார் சேவை மையங்களில் காலியாக உள்ள ஆபரேட்டர் (Operator) மற்றும் சூப்பர்வைசர் (Supervisor) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 1. வகை: மத்திய அரசு வேலை, 2. பணியிடங்கள்: 252, 3. வயது: 18 வயது பூர்த்தியடைந்தவர், 4. சம்பளம்: ரூ.20,000, 5. தகுதி: 12ஆம் வகுப்பு, 6. கடைசி தேதி: 10.03.2026, 7. விண்ணப்பிக்க: <>CLICK HERE<<>> இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News March 3, 2026

விழுப்புரம்: வாய்கால் தூர்வாறும் பணியை ஆட்சியர் ஆய்வு!

image

விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட பூந்தோட்டம் பகுதியில் உள்ள வாய்கால் தூர்வாறும் பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்த பணியை ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான், இன்று (மார்ச்.03) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் நகராட்சி பொறியாளர் புவனேஸ்வரி, நகர்நல அலுவலர் மரு.ஸ்ரீபிரியா உட்பட பலர் உள்ளனர்.

error: Content is protected !!