News October 18, 2025

ஆற்றங்கரையோர மங்களுக்கு எச்சரிக்கை

image

புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் நேற்று வெளியிட்டுள்ள செய்தியில், வீடூர் அணையில் இருந்து உபரிநீர் திறக்கப் படுவதால், சங்கராபரணி ஆற்றங்கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி பகுதிகளான மணலிப்பட்டு, செட்டிப்பட்டு, கூனிச்சம்பட்டு, கைக்கிலப்பட்டு, தேத்தாம்பாக்கம், நோணாங்குப்பம் ஆகிய கிராம மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Similar News

News October 18, 2025

முன்னாள் முதல்வர் நாராயணசாமி தீபாவளி வாழ்த்து

image

புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி இன்று வெளியிட்டுள்ள தீபாவளி வாழ்த்து செய்தியில், நாம் கொண்டாடும் பண்டிகைகளில் தீபாவளிக்கு என தனியிடம் உண்டு, சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் மகிழ்ச்சி அள்ளித்தரும் திருநாள் தீபாவளி சாதி, மதம், இனம், மொழி என்ற பேதமின்றி, சமத்துவத்தின் அடையாளமாக தீபாவளித் திருநாள் கொண்டாடப்படுகிறது. அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள் என்று தெரிவித்தார்.

News October 18, 2025

நாட்டிய சாஸ்திராலயாவின் சலங்கை பூஜை விழா

image

புதுச்சேரி கம்பன் கலையரங்கத்தில் நாட்டிய சாஸ்திராலயாவின் சலங்கை பூஜை விழா நடைபெற்றது. இதில் முதலமைசர் ரங்கசாமி, நாட்டியாலயா நிறுவனர் ராஜமாணிக்கம் எழுத்தாளர் கலா விசு கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி சிறப்புரையாற்றினர். சாஸ்திராலயா ஆசிரியர்கள் உமா ரமேஷ், மாதவி ஜெயப்பிரகாஷ் ஆகியோர் தலைமையில் 13 மாணவிகளின் சலங்கை பூஜை விழா நடைபெற்றது.

News October 18, 2025

புதுச்சேரி: தீபாவளி வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர்

image

புதுச்சேரி முதலமைச்சர் தீபாவளி வாழ்த்து செய்தியில், தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் பரவலாக கொண்டாடப்படுவதற்கு, இருளை நீக்கி ஒளியும், தீமையை அழித்து நன்மையும், அறியாமையை அகற்றி அறிவும் மேலோங்கும் என்ற ஆழமான நம்பிக்கையே அதன் காரணம் ஆகும். உங்கள் அனைவரது வாழ்வையும் மகிழ்ச்சியால் ஒளிர செய்யட்டும். அனைவரும் பாதுகாப்பாக மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழ இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!