News August 19, 2024
ஆற்காடு சுரேஷின் மனைவிக்கு நீதிமன்ற காவல்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடியை கைது செய்த செம்பியம் போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். ஆந்திராவில் பதுங்கியிருந்த பொற்கொடியை கைது செய்ததையடுத்து சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் அவரை காவல்துறையினர் ஆஜர்படுத்தினர். இதனையடுத்து பொற்கொடியை செப்டம்பர் 2-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Similar News
News September 9, 2025
திருவள்ளூர்: உளவுத்துறை வேலை விண்ணப்பிப்பது எப்படி?

▶️ உளவுத்துறையில் காலியாக உள்ள 394 பணியிடங்களுக்கு https://www.mha.gov.in மூலம் விண்ணப்பிக்கலாம்
▶️ இதில்மாதம் ரூ.25,500 – ரூ.81,100 வரை சம்பளம் வழங்கப்படும்
▶️ BA,BSc,BE,B.TECH படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
▶️ஆன்லைன் தேர்வு, எழுத்துத் தேர்வு,நேர்காணல் என 3 தேர்வுகள் நடைபெறும்.
▶️ விண்ணப்பிக்க செப்.14 கடைசி நாளாகும்.
▶️ இதனை வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க
News September 9, 2025
திருவள்ளூர்: கேன் வாட்டர் குடிக்கிறீங்களா! அதிரடி உத்தரவு

தமிழகம் முழுவதும் கேன் தண்ணீர் தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்து வந்த நிலையில், திருவள்ளூரில் உள்ள கேன் வாட்டர் ஆலைகளை ஆய்வு செய்ய உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். நிறுவனத்தின் பெயர், தாயரிப்பு தேதி, காலாவதியான தேதி உள்ளிட்டவை இடம்பெற வேண்டும், விதிகளை பின்பற்றாத கடைகளுக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என்றனர். மக்களே, கேன் வாட்டர் வாங்கும் போது செக் பண்ணி வாங்குங்க. (SHARE)
News September 9, 2025
திருவள்ளூர் கலெக்டர் அறிவிப்பு

திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள சுமார் 2 லட்சம் கால்நடைகளுக்கு தோல்கழலை நோய் தடுப்புத் திட்டத்திற்கான பூஸ்டர் தடுப்பூசிப்பணி 03.09.2025 முதல் 30.09.2025 வரை மேற்கொள்ளப்படவுள்ளது. எனவே, கால்நடை உரிமையாளர்கள் தங்களது பசுக்கள், எருமைகள், எருதுகள் மற்றும் 4 மாதத்திற்கு மேற்பட்ட இளங்கன்றுகள் ஆகியவற்றிற்கு இத்தடுப்பூசியினை தவறாது போட்டு கொள்ளுமாறு கலெக்டர் பிரதாப் தெரிவித்துள்ளார். (ஷேர் பண்ணுங்க)