News April 27, 2024
ஆர்.கே.நகரில் ரவுடி வெட்டிக் கொலை

தண்டையார்பேட்டை சிவாஜி நகரை சேர்ந்தவர் பிரபல ரவுடி ஆனந்தன் (எ) லொட்டை ஆனந்தன். இவர் மீது 20க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இந்நிலையில் நேற்று(ஏப்.26) இரவு வீட்டு வாசலில் போதையில் இருந்தவரை ஒரு கும்பல் வெட்டிவிட்டு தப்பியது. அருகில் இருந்தவர்கள் ஆனந்தனை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்ததாக தெரிவித்தனர். ஆர்.கே.நகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News August 22, 2025
சென்னை: ITI, டிப்ளமோ போதும், சூப்பர் வேலை!

சென்னை, ஆவடியில் உள்ள ராணுவ வாகனங்கள் தயாரிக்கும் நிறுவனத்தின் கீழ் எஞ்சின் தொழிற்சாலையில் தொழிற்பயிற்சி பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கு ITI, டிப்ளமோ & இன்ஜினியரிங் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு மாதம் ரூ.18,000 வரை உதவித்தொகை வழங்கப்படும். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் நேரடியாக நேர்காணலில் கலந்துகொள்ளலாம். நேர்காணல் செபடம்பர் 15ம் தேதி நடைபெற உள்ளது. ஷேர் பண்ணுங்க.
News August 22, 2025
சென்னை கலெக்டர் அறிவிப்பு

சென்னை மாவட்ட இளைஞர் நீதி குழுமத்தில் சமூகப்பணி உறுப்பினர் பணியிடங்கள் காலியாக உள்ளது. இப்பணிகளுக்கு உளவியல், சட்டம், சமூகவியல் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இவ்விண்ணப்பங்களை dsdcpimms.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து செப்.15 -க்குள் குழந்தைகள் நலத்துறை இயக்குநரகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.
News August 22, 2025
சென்னை தினம்: அமைச்சர் வாழ்த்து

சென்னை தினத்தையொட்டி அமைச்சர் சேகர்பாபு வாழ்த்து தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள X பதிவில், மெரினா கடல் அலைகள் முதல் நவீன ஐ.டி.சாலைகள் வரை நம் சென்னை வளர்ச்சி (ம) மனிதநேயத்தின் சின்னமாக விளங்குகிறது. இந்நாளில் நம் நகரின் பயணத்தை நாம் பெருமையுடன் கொண்டாடுவோம். வந்தாரை வாழ வைக்கும் நம் சென்னை எனப் பதிவிட்டுள்ளார்.