News May 10, 2024

ஆர்வ கோளாறால் அபாயத்தை தேடாதீர்!

image

சர்வதேச பிரசித்தி பெற்ற ஊட்டி மலர் கண்காட்சியை காண சுற்றுலா பயணிகள் வெளி மாநிலம், வெளி மாவட்டம், வெளி நாடு என வாகனங்களில் வருகிறார்கள். அதேபோல் மலை ரயில் பயணத்துக்கு பல மாதங்களுக்கு முன்பு முன்பதிவு செய்துள்ளனர். அப்படி ரயிலில் பயணம் செய்பவர்கள் வன விலங்குகளை கண்டதும் ஆர்வத்தில் கதவில் தொங்கியபடி செல்பி எடுப்பதை தவிர்க்க வேண்டும் என்று ரயில்வே துறை அறிவுறுத்தி உள்ளது.

Similar News

News November 20, 2024

புவிசார் குறியீடுக்கு காத்திருக்கும் ஊட்டி சாக்லேட்

image

மத்திய அரசின் தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சகத்தின் கீழ் புவிசார் குறியீடு உருவாக்கப்பட்டு 2002 முதல் வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் இதுவரை 61 வகையான பொருள்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. மேலும் 45 வகையான பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கும் முயற்சி நடைபெற்று வருகிறது. இதில் ஊட்டி சாக்லேட்டும் அடங்கும். ஏற்கனவே ஊட்டி வர்க்கிக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.

News November 20, 2024

உதகையில் பிக் பாஸ் புகழ் அமீர்

image

தனியார் கார் நிறுவன விழாவில் கலந்து கொள்ள உதகை வந்த பிக் பாஸ் புகழ் அமீர் செய்தியாளரிடம் பேசுகையில், பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதில் கமல்ஹாசன் ஒருவிதமாகவும், விஜய் சேதுபதி ஒருவிதமாகவும் மக்களை கவர்ந்து வருகின்றனர். கமல்ஹாசனை ஒரு முறையாவது பார்த்து விட முடியுமா என்ற ஏக்கத்தில் இருந்த ரசிகன், அவரது நிகழ்ச்சியில் பங்கு பெற்று உங்கள் முன்னால் எல்லாம் நிற்பதில் பெருமை கொள்கிறேன் என்றார்.

News November 20, 2024

நீலகிரி: வீரதீர செயல்புரிந்தோர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

image

நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பாவ்யா தண்ணீரு வெளியிட்ட அறிக்கையில், வீரதீர செயல்கள் புரிந்து வரும் 13 வயதுக்கு மேல் 18 வயதிற்கு உட்பட்ட பெண் குழந்தைகள் மாநில விருதுக்கு விண்ணப்பிக்கலாம் எனவும், தமிழக அரசின் விருதுகள் இணையதளத்தில் வரும் இருபதாம் தேதி முதல் டிசம்பர் 25ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என கூறியுள்ளார்.