News November 23, 2025
‘ஆர்யன்’ ஓடிடி ரிலீஸ் எப்போது?

விஷ்ணு விஷால் நடிப்பில், பிரவீன் கே இயக்கியுள்ள ‘ஆர்யன்’ படம் அக்.31-ம் தேதி வெளியானது. படத்தின் முதல் பாதி நன்றாக இருந்ததாகவும், கடைசி பாதி ஸ்லோவாக இருந்ததாகவும் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில், இப்படத்தில் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, வரும் 28-ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இப்படம் வெளியாக உள்ளது.
Similar News
News November 23, 2025
₹105 கோடி.. தமிழ் சினிமாவில் வரலாறு படைத்த ‘ஜனநாயகன்’

‘ஜனநாயகன்’ படத்தின் தியேட்டர் உரிமம், 5 விநியோகஸ்தர்களுக்கு பிரித்து விற்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, மொத்தம் ₹105 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாகவும், தமிழ் சினிமா வரலாற்றில், ஒரு படத்தின் தியேட்டர் உரிமம் இவ்வளவு பெரிய தொகைக்கு விற்கப்படுவது இதுவே முதல்முறை என்றும் சினிமா வட்டாரங்கள் ஆச்சரியத்துடன் தெரிவிக்கின்றன. இது விஜய்யின் கடைசி படம் என்பதால், பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
News November 23, 2025
பிங்க் டால்பின் பற்றி தெரியுமா?

அமேசான் நதியின் ஆழத்தில் நீந்தி திரியும் ஒரு அதிசயம் தான் பிங்க் டால்பின். இது ‘போட்டோ’ என்றும் அழைக்கப்படுகிறது. பிறக்கும்போது சாம்பல் நிறத்தில் உள்ள இவை, வளர வளர பிங்க் நிறமாக மாறுகின்றன. இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், உற்சாகமடையும் போது இவை மேலும் பிரகாசமான பிங்க் நிறமாக மாறுமாம். மற்ற டால்பின்களை விட புத்தியசாலியானது என கூறும் நிபுணர்கள், இவை அழியும் நிலையில் உள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர்.
News November 23, 2025
மீண்டும் அதே தவறை செய்கிறாரா விஜய்?

கரூர் சம்பவத்திற்கு பொறுப்பேற்காமல், ஆளுங்கட்சி மீது பழிபோட்டார் என விஜய் மீது விமர்சனம் வைக்கப்பட்டது. இந்நிலையில், காஞ்சியில் மக்களுடனான சந்திப்பில் கரூர் சம்பவத்தை குறிப்பிட்டு பேசிய விஜய், ’என்னை ஏன் தொட்டோம், என் மக்களை ஏன் தொட்டோம்னு வருந்துவீங்க’ என பேசியிருக்கிறார். இதனால், மீண்டும் PUNCH வசனம் பேசி கரூர் மேட்டரில் ஆளும் தரப்பை அவர் கைகாட்டி இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.


