News January 23, 2026
ஆர்டர் பண்ணாமலே பொருள் வருதா… கவனமா இருங்க

Flipkart, Amazon ஆகியவற்றில் ஆர்டர் செய்யாமலே உங்களுக்கு பொருள் வந்துள்ளது என கூறி சிலர் நூதன மோசடி செய்து வருகிறார்கள். அந்த ஆர்டரை கேன்சல் பண்ண, ஒரு கஸ்டமர் கேர் நம்பரை கொடுக்கிறார்கள். நீங்கள் அதில் அழைத்து பேசினால், ஒரு OTP-யை அனுப்புகிறார்கள். அதை நீங்க சொன்ன உடனேயே, உங்க போன் நம்பருடன் லிங்க் ஆகியிருக்கும் பேங்க் அக்கவுண்ட்டில் இருக்கும் பணத்தை எடுத்து விடுகின்றனர்.
Similar News
News January 25, 2026
92 வயதில் 37 வயது பெண்ணை அம்மா ஆக்கினார்❤️❤️

92 வயதில் அப்பாவாகி உலகையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார் ஆஸி., டாக்டர் ஜான் லெவின். இவரின் மகன், தன் 65-வது வயதில் நோய் பாதித்து உயிரிழந்தார். இந்நிலையில் தங்களுக்கு ஒரு வாரிசு இல்லாமல் போய்விடுமோ என்ற கவலையில் ஆழ்ந்த லெவினும், அவரது 2-வது மனைவியான 37 வயது யான் யிங்கும் குழந்தை பெற முடிவெடுத்தனர். அதன்பின், IVF முறையில் முயற்சிக்க முதல் அட்டம்டிலேயே ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளனர்.
News January 25, 2026
14 தமிழர்களுக்கு பத்ம விருதுகள்

பத்மஸ்ரீ விருது: விஞ்ஞானி புண்ணியமூர்த்தி நடேசன், ஒதுவார் திருத்தணி சுவாமிநாதன், ஓவியர் ஆர்.கிருஷ்ணன், சிற்பக் கலைஞர் கலியப்ப கவுண்டர், மிருதங்க கலைஞர் பக்தவச்சலம், சென்னை IIT இயக்குநர் வீழிநாதன் காமகோடி, கல்வியாளர் சிவசங்கரி. H.V.ஹண்டே.
பத்மவிபூஷன் விருதுகள்: கள்ளிப்பட்டி ராமசாமி பழனிசாமி, சமூக ஆர்வலர் மயிலாநந்தன், காயத்ரி பாலசுப்ரமணியன், ரஞ்சனி பாலசுப்ரமணியன், ராமசாமி, விஜய குமார்.
News January 25, 2026
ஜன நாயகன் படம் ரிலீஸ்.. வந்தாச்சு HAPPY NEWS

நெருக்கடியிலிருந்து ஜன நாயகன் மீண்டு விட்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது. கரூர் வழக்கில் சிபிஐ விசாரணை முடிந்துவிட்ட நிலையில், தற்போது சென்சார் வழக்கிலும் சாதகமான தீர்ப்பு வர அதிகளவில் வாய்ப்புள்ளதாக சட்ட ஆலோசகர்கள் விஜய்யிடம் கூறியதாக சொல்லப்படுகிறது. இதனால், அவர் உற்சாகமடைந்துள்ளதாகவும், தீர்ப்பு வெளியான அன்று மாலையில் ஜன நாயகன் ரிலீஸ் தேதியை அறிவிக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.


