News November 5, 2025
ஆரியத்தின் முன்பு மண்டியிட்ட திராவிடம்: சீமான்

தமிழகத்தில் கட்சிகளுக்குள் போட்டியில்லை; திராவிட கருத்தியலுக்கும் தமிழ் தேசிய கருத்தியலுக்கும் இடையேதான் போட்டி என்று சீமான் தெரிவித்துள்ளார். பார்ப்பனப் பெண்ணான ஜெ.,வின் தலைமையை திராவிடத் தலைவர்கள் எப்படி ஏற்றார்கள் என கேள்வி எழுப்பிய அவர், ஆரியத்தின் முன்பு திராவிடம் மண்டியிட்டது என விமர்சித்துள்ளார். மண்டியிட்டால் கூட பரவாயில்லை; குப்புறவிழுந்து கும்பிட்டது என கடுமையாக சாடினார்.
Similar News
News November 5, 2025
ஹர்மன்பிரீத் கவுரின் கணவர் யார்? தேடும் நெட்டிசன்கள்

உலகக்கோப்பையை வென்றதற்கு இந்திய மகளிர் அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. ஆனால், அதே நேரத்தில் சிலர் அவரின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து அறிந்து கொள்ள தான் ஆர்வமாக இருக்கிறார்கள். அதேபோல, அவரது கையில் இருக்கும் டாட்டூவின் அர்த்தம் என்ன என்றும் தேடிக் கொண்டிருக்கிறார்கள். டாட்டூ பிரம்ம யந்திரா எனக் கூறப்படும் நிலையில், அவரது கணவர் குறித்த தகவல் இல்லை.
News November 5, 2025
விலை மொத்தம் ₹5000 குறைந்தது

ஆபரணத் தங்கத்தை தொடர்ந்து, வெள்ளி விலையும் தொடர்ந்து குறைந்துகொண்டே வருகிறது. இன்று வெள்ளி விலை கிராமுக்கு ₹2 குறைந்து ₹163-க்கும், கிலோ வெள்ளி ₹2000 குறைந்து ₹1,63,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ₹3000, இன்று ₹2000 என 2 நாளில் மொத்தம் ₹5000 குறைந்துள்ளது. சர்வதேச சந்தையில் தங்கம், வெள்ளி விலை சரிந்துள்ளதால், வரும் நாள்களில் மேலும் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News November 5, 2025
கோவை மாணவியை மீட்க தாமதம் ஏன்?: EPS

கோவையில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவியை 100 போலீஸ் தேடியும் மீட்க நான்கரை மணி நேரம் ஆனது ஏன் என EPS கேட்டுள்ளார். குற்றவாளிகளை பிடித்ததாக CM தம்பட்டம் அடித்துக்கொள்வதாக கூறிய அவர், மாணவியை மீட்க ஏற்பட்ட தாமதத்திற்கு தலைகுனிய வேண்டும் என்றார். மேலும், இருட்டான இடம் என்பதால் தாமதம் ஏற்பட்டது என்ற விளக்கத்தை அளிக்கவே திமுக அரசின் காவல்துறை கூச்சப்பட வேண்டும் என கடுமையாக சாடியுள்ளார்.


