News August 14, 2024

ஆரணி நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை

image

ஆரணி அடுத்த நெசல் கூட்டுசாலையில் விழுந்த மரத்தில் மோதி சிவா என்பவர் திங்கள் அன்று உயிரிழந்தார். விபத்திற்கு அதிகாரிகளே காரணம் என கூறி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலுவின் ஆணைக்கிணங்க, ஆரணி உதவிக் கோட்டப் பொறியாளர் சந்திரசேகர் பணியிட மாற்றம், இளநிலைப் பொறியாளர் செந்தில்குமார், சாலை ஆய்வாளர் பாஸ்கர் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

Similar News

News August 5, 2025

தி.மலை: மக்கள் குறைதீா் கூட்டத்தில் 627 மனுக்கள்

image

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் (ஆகஸ்டு.04) திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கைகளை வலியுறுத்தி 627 மனுக்கள் வரப்பெற்றன. கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ் பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்று சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.

News August 5, 2025

தி.மலை: உங்களுடன் ஸ்டாலின் முகாம்

image

செங்கம் அடுத்த பெரியகோளாப்பாடி கிராம சேவை மைய கட்டிடத்தில், நாளை ஆகஸ்ட்-5, செவ்வாய்க்கிழமை, காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறுகிறது. அஸ்வநாகசுரணை, பீமானந்தல் (ம) சின்னகோளாப்பாடி கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நடைபெற உள்ளது. இம்முகாமில் தமிழ்நாடு அரசின் 15 துறைகளின் 45 விதமான சேவைகள் வழங்கிட பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட உள்ளது.

News August 4, 2025

தி.மலை இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

திருவண்ணாமலை மாவட்ட காவல்துறையின் சார்பாக (ஆகஸ்ட்.4) இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ள காவல்துறை அதிகாரிகள் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தங்களுடைய பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக செயல்படக்கூடிய நபர்கள் இருந்தாலோ அல்லது பாதுகாப்பின்மை பிரச்சனையை ஏற்பட்டாலோ அவர்களுடைய தொலைபேசி எண்கள் (அ) 100 என்ற எண்ணை அழைத்து புகார்களை பதிவு செய்யலாம்.

error: Content is protected !!