News March 21, 2024
ஆரணி தொகுதியின் புதிய திமுக வேட்பாளர்

2024 மக்களவைத் தேர்தல், ஆரணி தொகுதியில் திமுக சார்பில் தரணி வேந்தன் போட்டியிடவுள்ளார். கடந்த முறை திமுக கூட்டணியில் காங்கிரஸிலிருந்து விஷ்ணுபிரசாத் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த முறை இத்தொகுதியில் திமுக-வே நேரடியாக களம் காண்கிறது. இதில் போட்டியிடும் தரணி வேந்தன், திருவண்ணாமலை கிழக்கு மாவட்ட செயலாளராக இருந்து வருகிறார். போளூர், ஆரணி, செய்யார், வந்தவாசி ஆகியவை இதன் சட்டமன்றத் தொகுதிகள்.
Similar News
News September 18, 2025
தி.மலை: தீராத நோய் எல்லாம் தீர இங்கு போங்க!

ஒவ்வொரு மனித உடலும் ஆலயம் போன்றது என்பது சித்தர்களின் வாக்கு. பணம், பதவி எது இருந்தாலும் நோய்நொடி இல்லாத வாழ்க்கையே சிறந்த செல்வம். தீராத நோய்களை தீர்க்கும் வைத்தீஸ்வரன் கோவில், திருவண்ணாமலை மாவட்டத்தில் உக்கலில் அமைந்துள்ளது. இங்கு நவகிரகங்கள் அனைத்தும் ஒரே நேர்க்கோட்டில் அமைந்து, இறைவனின் கட்டளைக்குப் பணிந்து பக்தர்களின் நோய்களையும் தோஷங்களையும் போக்குவதாக ஐதீகம். ஷேர் பண்ணுங்க
News September 18, 2025
தி.மலை: B.Sc, BE, B.Tech, BCA படித்தவரா நீங்கள்?

தி.மலை மக்களே! ஐடி துறையில் சாதிக்க விரும்புபவரா நீங்கள்? உங்களுக்கான சூப்பர் வாய்ப்பு இதோ. தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் கணினி அறிவியல், ஐடி துறையில் ஏதேனும் ஒரு டிகிரி படித்தவர்களுக்கு டெவலப்பர் பணிக்கு பயிற்சி அளிக்கப்படவுள்ளது. மேலும், இதில் பயிற்சி முடித்தவர்களுக்கு முன்னணி தனியார் நிறுவனங்களில் உறுதியாக வேலை ஏற்படுத்தி தரப்படும். இந்த <
News September 18, 2025
தி.மலை: லாரி மோதி நடிகர் பலி!

தி.மலை, செய்யாறு, பல்லி கிராமத்தைச் சோ்ந்த நாடக நடிகா் ரஞ்சித்குமாா் (46) இவா் தனது நண்பரான சின்னப்பையனுடன் நேற்று (செப்.17) பைக்கில் காஞ்சிபுரம் சென்று கொண்டிருந்தாா். மாமண்டூா் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே சென்றபோது, பின்னால் வந்த லாரி, பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் நாடக நடிகா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து தூசி போலீசார் விசாரித்து வருகின்றனர்.