News May 15, 2024

ஆரணி: செல்போன் திருடிய வட மாநில வாலிபர் கைது

image

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பழைய பேருந்து நிலையத்தில் மழையினால் ஒதுங்கி இருந்த கூட்டத்தில், பயணிகளிடம் செல்போன் திருடிய ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ராஜ்குமார் நோனியா(22) என்ற வடமாநில வாலிபரை பொதுமக்கள் மடக்கி பிடித்து தரும அடி கொடுத்து ஆரணி நகர காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். ஆரணி போலீசார் திருட்டு வழக்கில் வட மாநில வாலிபரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Similar News

News May 7, 2025

தி.மலை மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

image

தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தி.மலை மாவட்டம் பொறுத்தவரை இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்டை மாவட்டங்களான திருப்பத்தூர், வேலூர், தருமபுரி, கிருஷ்ணகிரியில் பலத்த காற்றுடன் கூடிய ஆலங்கட்டி மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது. உங்க ஏரியால வானிலை எப்படி இருக்கு? கமெண்ட்ல சொல்லுங்க.

News May 7, 2025

தி.மலை விவசாயிகளுக்கு கலெக்டர் அறிவிப்பு

image

மத்திய அரசு ஆதார விலை திட்டத்தின் கீழ் 2024-25-ம் ஆண்டிற்கு வருகிற ஜூன் மாதம் 12 ஆம் தேதி வரை உள்ள ராபி பருவ காலத்தில் சாகுபடி செய்யப்பட்ட உளுந்து ஒரு கிலோ ரூ.74-க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. ஒரு ஏக்கருக்கு 204 கிலோ மட்டுமே ஒரு விவசாயியிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் தகவல் அளித்துள்ளார். மேலும் விவரங்களுக்கு தங்கள் அருகில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை அழுகவும்.

News May 7, 2025

தி.மலை முக்கிய காவல் அதிகாரிகளின் எண்கள்

image

தி.மலை SP சுதாகர் -9498111011, ADSP அண்ணாதுரை-9442188558, ADSP சிவனுபாண்டியன்-9940133820, ADSP பழனி-9443333003, தி.மலை டவுன் DSP-9629872483, ருரல் DSP -9994922033, போளூர் DSP-9442218937, வந்தவாசி DSP- 9443477675, செய்யார் DSP-9940444167, செங்கம் DSP-7010021675, ஆரணி DSP-6380631362, மதுவிலக்கு அமல் பிரிவு DSP-944260197, கிரைம் பிரண்ட்ச் DSP-9443438227. உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!