News April 29, 2025
ஆரணி அருகே பட்டா கத்தியுடன் ரீல்ஸ்

ஆரணி அடுத்த நெசல் சாலையில் நேமிக்குமார்(20) என்ற இளைஞர் பட்டா கத்தியுடன் செல்போனில் ‘ரீல்ஸ்’ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இதை பார்த்து அச்சமடைந்த அப்பகுதி மக்கள் ஆரணி தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், போலீசார் அந்த வாலிபரை கைது செய்தனர். ரீலிஸ் மோகத்தில் வெத்து சீன் போட்ட நேமிக்குமார் தற்போது வேலூர் மத்திய சிறையில் கம்பி எண்ணி கொண்டிருக்கிறார்.
Similar News
News April 29, 2025
திருவண்ணாமலை குறைதீர் கூட்டத்தில் 840 மனுக்கள்

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று வாராந்திர மக்கள் குறைதீர்வு கூட்டம் கலெக்டர் தர்ப்பகராஜ் தலைமையில் நடந்தது. அதில், டிஆர்ஓ ராம்பிரதீபன் உள்பட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். இதில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 840 மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்ட்டுள்ளது. பொதுமக்கள் அளித்த மனுக்கள் மீது, சம்பந்தப்பட்டதுறை அலுவலர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவிட்டார்.
News April 29, 2025
கள்ளக்காதல் ஜோடி சடலமாக மீட்பு

கலசப்பாக்கத்தை சேர்ந்த முருகனுக்கு(43) மனைவி, 3 மகள்கள் உள்ளனர். அதே கிராமத்தை சேர்ந்த கீதாவுக்கு(38) கணவர், 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில், முருகனுக்கும், கீதாவுக்கும் தகாத உறவு ஏற்பட்டுள்ளது. இருவரும் திடீரென கடந்த பிப்.08ஆம் தேதி மாயமான நிலையில், நார்த்தாம்பூண்டி பழங்கோயில் ஏரியில் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
News April 28, 2025
திருவண்ணாமலை சிறப்புகள்

1. தி.மலை தலத்தைச் சுற்றி 1008 லிங்கங்கள் புதைந்து இருப்பதாகக் கூறப்படுகிறது.
2. வினையை நீக்கும் மலை உருவில் திருவண்ணாமலை உள்ளது.
3. இங்கு தான், முதன் முதலில் லிங்க வழிபாடு தொடங்கியது.
4. கார்த்திகை தீபத்துக்கு நிகராக இதுவரை எந்த ஆலயத்திலும் ஜோதி வழிபாடு நடந்ததில்லை.
5.தி.மலை மலை உச்சியில் தீபம் ஏற்றப்பட்டதும் வணங்கினால், பாவம் நீங்கி பிறவிப் பிணி அகழும் என்பது ஐதீகம். ஷேர் பண்ணுங்க