News February 10, 2025
ஆரணி அருகே சாலை விபத்தில் 2 பேர் பலி

ஆரணியை அடுத்த கீழ்நகர் கிராமத்தைச் சேர்ந்த கோபி (35), கணேஷ் (38) இருவரும் நேற்று ஞாயிற்றுக்கிழமை கீழ்நகர் நோக்கி மொபெட்டில் திரும்பிக் கொண்டிருந்தனர். அரியப்பாடி பகுதியில் வேலூர் சாலையை கடந்தபோது மேல்மருவத்தூர் சென்றுவிட்டு பெங்களூரு திரும்பிக் கொண்டிருந்த கர்நாடக மாநில அரசுப் பேருந்து மொபெட் மீது மோதியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
Similar News
News April 4, 2026
நாசாவை திரும்பி பார்க்க வைத்த தி.மலை மாணவர்கள்!

அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் நடத்திய விண்வெளி போட்டியில் உலக அளவில் திருவண்ணாமலை கிரிவல பாதையில் அமைந்துள்ள தனியார் டெக்னோ பள்ளி மாணவர்கள் 3-ஆம் பரிசு வென்று சாதனைபடைத்து இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளனர். உலகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் பங்கேற்ற நிலையில் சபரி, கிரிஷ்ராம், ஜஸ்வந்த், லோகித்ராம் ஆகியோர் தேர்வாகி உலக அளவில் 3ஆம் பரிசு வென்று புருவம் தூக்க வைத்துள்ளனர்.
News April 4, 2026
தி.மலை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (ஏப்ரல்.3) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.