News May 25, 2024
ஆயுதம் ஏந்திய காவலர் ரோந்து பணி: எஸ்பி உத்தரவு

நெல்லை மாவட்டம், மூன்றடைப்பு தீபக்ராஜா படுகொலையில் அவருடைய உடல் அரசு மருத்துவமனையில் உள்ளது. தீபக் ராஜாவின் உடலை அவரது உறவினர்கள் பெறும் வரை மாவட்டத்தில் உள்ள அனைத்து சாலைகள் மற்றும் முக்கிய இடங்களில் காவல் துறையினர் பாதுகாப்பு பணியிலும் இருசக்கர வாகனத்தில் ஆயுதம் ஏந்திய காவலர்கள் ரோந்து பணியும் மேற்கொள்ள நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் இன்று (மே25) உத்தரவிட்டார்.
Similar News
News November 11, 2025
நெல்லை: கிறிஸ்தவர்கள் மானியம் பெற விண்ணப்பிக்கலாம் – ஆட்சியர்

தமிழ்நாட்டை சேர்ந்த அனைத்து பிரிவினரையும் உள்ளடக்கிய 600 கிறிஸ்தவர்கள் பயனடையும் வகையில் ஜெருசலின் புனித பயணம் மேற்கொண்டு திரும்பிய கிறிஸ்தவர்களுக்கு இ சி எஸ் முறையில் நேரடியாக மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் ஜெருசலேம் புனித பயணம் மேற்கொண்ட கிறிஸ்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மாவட்ட சிறுபான்மை நல அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம். *SHARE
News November 11, 2025
மாவட்ட அணைகளின் நீர்வரத்து மற்றும் விவரங்கள்

திருநெல்வேலி மாவட்டம் சுற்றியுள்ள பகுதிகளிலே அணைகளின் நீர்மட்ட விபரங்கள் பாபநாசம் அணை 143/64.84%mm, மணிமுத்தாறு அணை 118/66.54%mm, செயலாளார் அணை156/52.39%mm, வடக்குப்பச்சார அணை 49.30/4.64%mm, நம்பியார் அணை22.96/21.21%mm, கொடுமுடியாறு அணை 52.50/79.96%mm, மாவட்டத்தை சுற்றியுள்ள கிராமங்களுக்கு விவசாயத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது. மூன்று அணைகளில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது.
News November 11, 2025
நெல்லை: கம்மி விலையில் சொந்த வீடு – APPLY!

நெல்லை மக்களே, TNHB திட்டம் மூலம் மக்களுக்கு மானிய விலையில் சொந்த வீடு வாங்கும் கனவை அரசு நிறைவேற்றி வருகிறது. உங்க மாவட்டத்திலே சொந்த வீடு வேணுமா? 21 வயது நிரம்பி, எந்த சொத்தும் இல்லாதவர்களாக இருக்க வேண்டும். சம்பளம்: 25,000 – 70,000 வரை பெறுபவர்கள் இங்கு <


