News August 16, 2025
ஆயுதப்படை காவலர்களுக்கான குறை தீர்வு கூட்டம்

ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று ஆயுதப்படை காவலர்களுக்கான குறை தீர்வு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அய்மன் ஜமால் காவலர்களிடமிருந்து மனுக்களை பெற்றுக் கொண்டார். 58 பேர் மனுக்கள் கொடுத்தனர். இதில் பணியிட மாற்றம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மனுவாக அளிக்கப்பட்டது.
Similar News
News August 17, 2025
இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆகஸ்ட் -16 இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை ஆற்காடு சோளிங்கர் அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசாரை புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம் :9884098100
News August 16, 2025
மனு தந்த மூதாட்டிக்கு பட்டா வழங்கிய அமைச்சர்

சுமைதாங்கி கிராமத்தில் கடந்த 13ஆம் தேதி தாயுமானவர் திட்டத்தை அமைச்சர் காந்தி தொடங்கி வைத்தார். அப்போது அதே கிராமத்தைச் சேர்ந்த வள்ளியம்மாள் என்பவர் தான் குடியிருக்கும் வீட்டிற்கு பட்டா கேட்டு அமைச்சர் காந்தியிடம் மனு கொடுத்தார். அதை தொடர்ந்து வருவாய் துறையினர் விசாரணை நடத்தி பட்டா தயார் செய்தனர். அதற்கான பட்டா ஆணையை இன்று மூதாட்டி வள்ளியம்மாளிடம் அமைச்சர் காந்தி நேரில் சென்று வழங்கினார்.
News August 16, 2025
ராணிப்பேட்டை: இலவச 5G பயிற்சி; ரூ.4.5 லட்சம் வரை சம்பளம்

ராணிப்பேட்டை மக்களே, தமிழ்நாடு அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் 5G Communication Technology சான்றிதழ் படிப்பை இலவசமாக வழங்குகிறது. 70% நேரடி வகுப்பிலும், 30% ஆன்லைன் வழியாகவும் பயிற்சி அளிக்கப்படும். இந்த பயிற்சியின் மூலம் முன்னணி நிறுவனங்களின் பணி வாய்ப்பை பெறும் இளைஞர்களுக்கு வருடம் ரூ.4.5 லட்சம் சம்பளம் கிடைக்கும். 18 முதல் 35 வயது உடையவர்கள் <