News January 2, 2025
ஆயுதங்களுடன் சுற்றி திரிந்த வாலிபர் கைது

மதுரை கூடல் புதூர் போலீஸ் எஸ்ஐ கணேசன் ரோந்து சென்றபோது வாளுடன் பதுங்கி இருந் விளாங்குடி சொக்கநாதபுரம் இரண்டாவது தெருவை சேர்ந்த பழனிக்குமார் (32)என்பவரை கைது செய்து கூடல்புதூர் காவல்நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட நிலையில் யாரையும் கொலை செய்ய சதித் திட்டம் தீட்டப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு அவர் மீது ஆயுதங்களை சட்டவிரோதமாக வைத்திருந்ததாக வழக்கு பதிவு செய்து செய்து சிறையில் அடைத்தனர்.
Similar News
News February 9, 2026
மதுரை: நாளைய மின்தடை பகுதிகள்

மதுரை, குலமங்கலம், பி.பி.குளம் பகுதியில் நாளை (பிப்.10) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை. நாராயணபுரம், ஆத்திகுளம், ஐயர்பங்களா, வள்ளுவர் காலனி, விஸ்வநாதபுரம், மகாத்மா காந்தி நகர், சிவக்காடு, முல்லை நகர், குலமங்கலம், கிருஷ்ணாபுரம் காலனி, ஆனையூர், பனங்காடி, மீனாட்சிபுரம், பி.பி.குளம், மருது பாண்டியர் நகர் என மின் சேர் பொறியாளர் தெரிவித்துள்ளார். மேலும் உள்ள மின்தடை பகுதிகளை காண <<19089541>>CLICK<<>> *SHARE
News February 9, 2026
மதுரை பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம்

மதுரை வாசிகளே! பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பெண்கள், மாற்றுத்திறனாளிகள் சுயசார்புடன் வாழ சத்யவாணி முத்து அம்மையார் நினைவாக தையல் இயந்திரங்கள் இலவசமாக வழங்கபடுகின்றன. ஆண்டு வருமானம் ரூ.72,000-க்கும் குறைவாக உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் அல்லது மதுரை மாவட்ட சமூக நல அலுவலரை அனுகலாம் . தொடர்புக்கு 0452 – 2580259. SHARE பண்ணுங்க!
News February 9, 2026
மதுரை: பிறந்தநாளன்று வாலிபருக்கு நேர்ந்த சோகம்

மதுரை, வாடிப்பட்டி அருகே கச்சைகட்டியைச் சேர்ந்த மனோஜ்குமார் (19) தாதம்பட்டியில் உள்ள தனியார் பின்னலாடை நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். நேற்று அவர் பிறந்த நாளை கொண்டாட கேக் வாங்கி நண்பர் பிரபுவுடன் சென்றபோது, முனியாண்டி கோவில் அருகே மற்றொரு இருசக்கர வாகனத்துடன் நேருக்கு நேர் மோதல் ஏற்பட்டது. இதில் படுகாயமடைந்த மனோஜ்குமார் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார்.


