News August 9, 2024

ஆம்ஸ்ட்ராங் வழக்கில் பாஜக பிரமுகருக்கு சம்மன்

image

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் வடசென்னை பாஜக வழக்கறிஞர் பால் கனகராஜ் நேரில் ஆஜராக போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். போலீசார் சம்மன் அனுப்பியதைத் தொடர்ந்து, போலீசார் அவரிடம் இன்று விசாரணை நடத்த உள்ளனர். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில், பால் கனகராஜ் வடசென்னை தொகுதியில் போட்டியிட்டார். பிரபல ரவுடிகள் சம்போ செந்தில், நாகேந்திரனுக்கு வழக்கறிஞராக செயல்பட்டதால் போலீசார் அவரிடம் விசாரணை நடத்த உள்ளனர்.

Similar News

News September 7, 2025

திருவள்ளுர்: இந்த APP உங்க போன்ல இருக்கா?

image

மக்களின் பாதுகாப்பிற்காக காவலன் SOS செயலி உள்ளது. இந்த APPஐ பத்திரவிறக்கம் செய்து அவசர காலத்தில் மொபைலை அதிர செய்தால் நம் லொகேஷன் போலீஸ் கண்ட்ரோல் ரூமிற்கும், APPல் EMERGENCY CONTACTல் பதிவு செய்த உறவினர்கள், நண்பர்களுக்கு சென்று விடும். அடுத்த சிலமணி நேரத்தில் போலீசார் லொகேஷனை டிராக் செய்து வந்து விடுவார்கள். இங்கு <>கிளிக்<<>> செய்து download செய்து கொள்ளுங்க. ஷேர் பண்ணுங்க. <<17637689>>தொடர்ச்சி<<>>.

News September 7, 2025

திருவள்ளுர்: இந்த APP உங்க போன்ல இருக்கா?

image

மேலும் மொபைல் டேட்டாவை ஆன் செய்து இந்த காவலன் SOS செயலியில் உள்ள SOSஐ கிளிக் செய்தால், மொபைலின் கேமரா தானாக திறந்து உங்களின் இருப்பிடத்தை புகைப்படம்/ வீடியோ எடுத்து கண்ட்ரோல் ரூமிற்கு அனுப்பும். மேலும் விபரங்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவகத்தை தொடர்பு கொள்ளலாம் (044-27666555). ஷேர் பண்ணுங்க

News September 7, 2025

டிப்பர் லாரி மோதி சிறுமி பலி

image

பூந்தமல்லி போரூரை கணேஷ் என்பவரின் மகள் யோகஸ்ரீ (வயது 10) தனது உறவுக்கார பெண்ணுடன் இருசக்கர வாகனத்தில் போரூர் அருகே சென்றபோது இருசக்கர வாகனத்தின் பின்னால் வந்த டிப்பர் லாரி மோதி சாலையில் தடுமாறி விழுந்தனர். இதில் யோகஸ்ரீ சம்பவ இடத்திலேயே பலியானார். உடன் சென்ற மற்றொரு சிறுமி மற்றும் உறவுக்கார பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!