News October 9, 2025

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குற்றவாளி நாகேந்திரன் மரணம்

image

வடசென்னை பிரபல தாதாவும், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை செய்த வழக்கில் ஏ1 குற்றவாளியுமான நாகேந்திரன் ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், இன்று காலை மாரடைப்பால் உயிரிழந்தார். கல்லீரல் பிரச்சினையால் கடந்த சில நாட்களாக அவர் சிகிச்சையில் இருந்ததாகவும், திடீர் மாரடைப்பால் உயிரிழந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Similar News

News October 9, 2025

சென்னை: விஜய் வீட்டிற்கு மிரட்டல் விடுத்தவர் கைது

image

சென்னை நீலாங்கரை இல்லத்தில் தவெக தலைவர் விஜய் வீட்டில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த தவ்பீக் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். மதுபோதையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக போலிசாருக்கு வாக்குமூலம் அளித்துள்ளார். இன்று காலை வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நிலையில் விஜய் இல்லத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்து வந்தனர். பின் அவை புரளி என தெரியவந்தது.

News October 9, 2025

சென்னை மக்களே ஆதாரில் இனி இது கட்டாயம்!

image

சென்னை மக்களே, அக்.1 முதல் மத்திய அரசு 5 – 17 வயது உள்ள குழந்தைகளுக்கு கை விரல் மற்றும் கண் விழி பதிவு (BIOMETRIC) ஆதாரில் கட்டாயம் என அறிவுறுத்தியுள்ளது. இதற்கு கட்டணம் எதும் இல்லை இலவசமாக பதிவு செய்து கொள்ளலாம். வரும் காலங்களில் ஆதார்தான் அனைத்திற்கும் தேவையாக இருக்கும். எனவே, உடனடியாக ஆதார் மையங்களுக்கு சென்று இலவசமா UPDATE பண்ணுங்க. இந்த தகவலை பெற்றோர்களுக்கு SHARE பண்ணுங்க.

News October 9, 2025

சென்னை: NLCல் 1000+ காலி இடங்கள்; கைநிறைய சம்பளம்

image

நெய்வேலி நிலக்கரி நிலையத்தில் அப்ரெண்ட்ஸ் பணிக்கு 1,101 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. ITI, பார்மசி, வணிகம், CS, நர்சிங் பட்டப் படிப்புகள் முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். உதவித்தொகையாக ரூ.12,524 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இந்த லிங்க் <<>>மூலம் அக்.27ம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் நபர்களுக்கு ஷேர் பண்ணி தெரியப்படுத்துங்க. ஒருவருக்கு வேலை கிடைத்தாலும் நல்லதுதானே!

error: Content is protected !!