News July 21, 2024

ஆம்ஸ்ட்ராங் கொலை: தீவிர தேடுதல் வேட்டை

image

ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக, கொசஸ்தலை ஆற்றில் இன்று 2ஆவது நாளாக தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. கொலை வழக்கில், அதிமுக கவுன்சிலர் ஹரிதரனுக்கும் தொடர்பு இருந்த நிலையில், போலீசார் நேற்று அவரை கைது செய்தனர். அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில், நேற்று கொசஸ்தலை ஆற்றில் 6 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து, இன்று 2ஆவது நாளாக ஆயுதங்கள் சிக்குமா? என போலீசார் தேடி வருகின்றனர்.

Similar News

News September 2, 2025

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் தகவல்

image

சுற்றுலாத் தொழிலில் ஈடுபட்டுள்ள சுற்றுலா தொழில்முனைவோர்களுக்கு 17 வகைப்பிரிவுகளின் கீழ் 48 விருதுகள் வழங்கப்பட உள்ளது. இந்த 2024-25 ஆம் ஆண்டு சுற்றுலா விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தாங்கள் www.tntourlamawards.com என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்ய வேண்டும் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டு உள்ள செய்தியில் தெரிவித்துள்ளார்.

News September 1, 2025

திருவள்ளூர் இரவு ரோந்து போலீசார் விவரம்

image

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் இரவு 11 மணி முதல், காலை 7 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள பகுதிகளில், ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரியின் எண்கள், மேலே கொடுக்கப்பட்டுள்ளன. இரவில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பகிரவும்.

News September 1, 2025

திருவள்ளூர்: திருக்குறள் பயிற்சி வகுப்பு

image

திருவள்ளூர் மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் நடைபெறும் திருக்குறள் பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ள விரும்புவோர் adtdtrl@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலோ அல்லது 044 29595450 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம். மேலும் நிறைவு நாளில் பயிற்சி பெற்றவர்களுக்கு தமிழக அரசின் பங்கேற்புச் சான்றிதழ் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!