News August 26, 2024

ஆம்ஸ்ட்ராங் கொலை குற்றவாளிக்கு நெஞ்சுவலி

image

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான விசாரணை கைதி ரவுடி திருமலைக்கு, நேற்றிரவு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. ஆற்காடு சுரேஷ் கூட்டாளியான இவர், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதாகி புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். நேற்றிரவு சுமார் 9 மணியளவில் திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து, போலீசார் அவரை சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாகத் தெரிகிறது.

Similar News

News November 7, 2025

திருவள்ளூர்: ஆடு, மாடு வளர்க்க ரூ.50 லட்சம் வரை மானியம்!

image

ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடை வளர்ப்பில் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு உத்யமி மித்ரா திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதன் மூலம், கால்நடை பண்ணைகள் அமைப்பதற்கு ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் இங்கு <>கிளிக்<<>> செய்து அதற்கான தகுதிகளை அறிந்துகொண்டு விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

News November 7, 2025

திருவள்ளூர்: அரசு அலுவலகம் செல்ல வேண்டாம்- இது போதும்

image

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம். 1) பான்கார்டு: NSDL 2) வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in 3) ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/ 4) பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink. <>இந்த இணையதளங்களில்<<>> விண்ணப்பியுங்க. ஷேர் பண்ணுங்க.

News November 7, 2025

புழல் ஏரியில் 200 கன அடி உபரி நீர் திறப்பு

image

திருவள்ளூர் மாவட்டம், புழல் ஏரி நீர் பிடிப்பு பகுதிகளில் நேற்று முதல் மீண்டும் மழை பெய்து வருவதால் புழல் ஏரி வேகமாக நிரம்பி வருகிறது. இதன் காரணமாக ஏரியின் பாதுகாப்பு கருதி தற்போது 200 கன‌அடி உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. எனவே ஏரியின் கால்வாய் ஓரங்களில் வசிப்பவர்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

error: Content is protected !!