News July 28, 2024
ஆம்ஸ்ட்ராங் கொலையில் மேலும் 3 பேர் கைது

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முகிலன், அப்பு, நூர் விஜய் ஆகிய 3 பேரை தனிப்படை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். ஏற்கெனவே, 18 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 21 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருவதால், மேலும் கைது செய்யப்படலாம் என்று தெரிகிறது.
Similar News
News March 3, 2026
திருவள்ளூர்: தேர்வு இல்லை – ஆதார் சேவை மையத்தில் வேலை!

இந்தியா முழுவதும் உள்ள ஆதார் சேவை மையங்களில் காலியாக உள்ள ஆபரேட்டர் (Operator) மற்றும் சூப்பர்வைசர் (Supervisor) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 1. வகை: மத்திய அரசு வேலை, 2. பணியிடங்கள்: 252, 3. வயது: 18 வயது பூர்த்தியடைந்தவர், 4. சம்பளம்: ரூ.20,000, 5. தகுதி: 12ஆம் வகுப்பு, 6. கடைசி தேதி: 10.03.2026, 7. விண்ணப்பிக்க: <
News March 3, 2026
திருவள்ளூரில் 25% மானியத்துடன் ரூ.10 லட்சம் கடன்!

திருவள்ளூர் பெண்களே.. யாரையும் எதிர்பார்க்காமல் சுயமாக சம்பாதித்து முன்னேற ஆசையா? உங்களுக்காக ‘ தமிழ்நாடு பெண்கள் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டம்’ கொண்டுவரப்பட்டுள்ளது. இதில், அதிகபட்சம் 25% (ரூ.2 லட்சம் வரை) மானியத்துடன், ரூ.10 லட்சம் வரை கடன் வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் இங்கு <
News March 3, 2026
திருவள்ளூர் கலெக்டரிடம் 633 மனுக்கள்!

திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று (மார்ச் 2) நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் நிலம் சம்பந்தமாக 181, கலைஞர் மகளிர் உரிமைத்தொகை சம்பந்தமாக 76, சமூக பாதுகாப்பு திட்டம் தொடர்பாக 109, வேலைவாய்ப்பு வேண்டி 32, பசுமைவீடு, அடிப்படை வசதிகள் வேண்டி 25, இதர துறைகள் சார்பாக 210 என மொத்தம் 633 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.


